கிராவிட் எம்பிவி: ஜனவரியில் அறிமுகமாகும் நிசானின் புதிய பட்ஜெட் ரக 7-சீட்டர் கார்!
செய்தி முன்னோட்டம்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது இடத்தைப் பலப்படுத்த நிசான் நிறுவனம் கிராவிட் (Gravite) என்ற பெயரில் ஒரு புதிய காம்பாக்ட் எம்பிவி காரைக் கொண்டு வருகிறது. 'ஈர்ப்பு விசை' (Gravity) என்ற வார்த்தையை அடிப்படையாகக் கொண்டு சூட்டப்பட்ட இந்தப் பெயர், நிலைத்தன்மை மற்றும் ஈர்ப்பைக் குறிக்கிறது. இந்தக் கார் வரும் 2026 ஜனவரி மாதம் அதிகாரப்பூர்வமாக காட்சிப்படுத்தப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, மார்ச் 2026 வாக்கில் இது விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நிசான் மேக்னைட் காருக்கு அடுத்தபடியாக இந்தியக் குடும்பங்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பட்ஜெட் ரக 7-சீட்டர் கார் ஆகும்.
சிறப்பம்சங்கள்
வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள்
பிளாட்பார்ம்: இது ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) காரின் அதே CMF-A+ பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத் தோற்றம்: நிசானின் அடையாளமான V-மோஷன் கிரில், எல்இடி டிஆர்எல் (LED DRLs) கொண்ட ஹெட்லேம்ப்கள் மற்றும் ஸ்போர்ட்டியான பம்பர் ஆகியவற்றுடன் இது காட்சியளிக்கிறது. காரின் பின்பக்கத்தில் தெளிவான லென்ஸ் கொண்ட டெயில் லைட்கள் மற்றும் Gravite என்றப் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். உட்புறம்: இதில் 7 பேர் அமரக்கூடிய வசதி உள்ளது. மூன்றாவது வரிசை இருக்கைகளைத் தேவைப்படும்போது அகற்றிக் கொள்ளும் வசதியும் இதில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்ஜின்
என்ஜின் மற்றும் செயல்திறன்
நிசான் கிராவிட் காரில் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். சக்தி: 72 hp பவர் மற்றும் 96 Nm டார்க் திறன் கொண்டது. கியர்பாக்ஸ்: 5-ஸ்பீடு மேனுவல் (Manual) மற்றும் 5-ஸ்பீடு ஏஎம்டி (AMT) ஆகிய இரண்டு ஆப்ஷன்களிலும் இது கிடைக்கும். எதிர்காலத்தில் இதில் மேக்னைட் காரில் உள்ளதைப் போன்ற டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனும் வர வாய்ப்புள்ளது.
விலை
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டி
இந்தக் காரின் விலை சுமார் ₹6 லட்சம் முதல் ₹9 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. இது சந்தையில் ரெனால்ட் ட்ரைபர், மாருதி எர்டிகா போன்ற கார்களுக்குப் போட்டியாக அமையும். நிசான் நிறுவனம் இந்தக் காரைத் தொடர்ந்து டெக்டன் என்ற புதிய எஸ்யூவி காரையும் வெளியிடத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.