Loading...
தேசிய நெடுஞ்சாலைகளில் தடுப்பில்லா சுங்கச்சாவடி முறை: TMCC 2.0 டிஜிட்டல் மையத்தை அமைக்கிறது NHAI
TMCC 2.0 என்ற ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்தை உருவாக்கவுள்ளது NHAI

தேசிய நெடுஞ்சாலைகளில் தடுப்பில்லா சுங்கச்சாவடி முறை: TMCC 2.0 டிஜிட்டல் மையத்தை அமைக்கிறது NHAI

எழுதியவர் Venkatalakshmi V
Aug 03, 2026
09:55 am

செய்தி முன்னோட்டம்

தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் நிற்காமல் பயணிக்கும் வகையில் தடுப்பில்லா சுங்கக் கட்டண முறையை கொண்டுவர இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தனது மத்திய சுங்க கண்காணிப்பு அமைப்பான TMCC-ஐ மேம்படுத்தி TMCC 2.0 என்ற ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்தை உருவாக்கவுள்ளது. NHAI அமைப்பின் கீழ் இயங்கும் இந்தியன் ஹைவேஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட் இந்த புதிய 'TMCC 2.0' டிஜிட்டல் கட்டளை மையத்தை அமைக்கவுள்ளது. இந்த மையம் தற்போது பயன்பாட்டில் உள்ள ஃபாஸ்டேக் முறை மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு வரும் 'மல்டி-லேன் ஃப்ரீ ஃபுளோ' (MLFF) சுங்க வசூல் முறை ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் கண்காணிக்கும்.

MLFF முறை

மல்டி-லேன் ஃப்ரீ ஃபுளோ (MLFF) முறை என்றால் என்ன?

MLFF என்பது சுங்கச்சாவடிகளில் தடுப்புகள் ஏதுமின்றி வாகனங்கள் வழக்கமான வேகத்தில் செல்லும் போதே சுங்கக் கட்டணம் வசூலிக்கும் தொழில்நுட்பமாகும்.

நெடுஞ்சாலைகளில் மேலே பொருத்தப்படும் கேன்ட்ரி அமைப்புகளில் உள்ள RFID வாசகர்கள் மற்றும் தானியங்கி எண் தகடு கண்டறியும் (ANPR) கேமராக்கள் மூலம் வாகனங்கள் அடையாளம் காணப்பட்டு தானாகவே கட்டணம் பிடிக்கப்படும்.

தற்போது தமிழ்நாடு, குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் 17 இடங்களில் இத்திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் முதற்கட்டமாக 105 இடங்களில் இம்முறையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நிதி மேலாண்மை

கசிவுகள் இன்றி சுங்கக் கட்டண நிதி மேலாண்மை

2021 முதல் செயல்பட்டு வரும் தற்போதைய TMCC மையத்தை விட, TMCC 2.0 அதிக அளவிலான நிகழ்நேரத் தரவுகளை கையாளும் திறன் கொண்டது.

சுங்கச்சாவடிப் பதிவுகள், வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் NPCI அமைப்பின் தகவல்களை ஒப்பிட்டு வருவாய் கசிவுகளை உடனடியாகக் கண்டறியும்.

நாடு முழுவதிலும் உள்ள 1,200-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் உள்ள RFID வாசகர்கள், ANPR கேமராக்கள் மற்றும் இதர உபகரணங்களின் செயல்பாடுகளை மத்திய டாஷ்போர்டு மூலம் கண்காணித்து பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்ய உதவும்.

ADVERTISEMENT