இந்தியாவில் தங்களுடைய கார் லைன்அப்பை ரீவேம்ப் செய்த கியா மோட்டார்ஸ்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் கார்களான செல்டோஸ், சோனெட் மற்றும் கேரன்ஸ் மாடல்களை மறுசீரமைப்பு செய்திருக்கிறது தென் கொரியாவைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான கியா மோட்டார்ஸ்.
அதன்படி, இந்த ஆண்டு ஜூலை மாதம் தங்களுடைய புதிய செல்டோஸ் ஃபேஸ்லிப்ட் மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது அந்நிறுவனம்.
புதிய செல்டோஸ் ஃபேஸ்லிப்ட் மாடலில், டூயல்-ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்பிளே மற்றும் ADAS பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் எனப் பல்வேறு புதிய வசதிகளைக் கூடுதலாகக் கொடுத்திருந்தது அந்நிறுவனம்.
இந்த வசதிகளில் குறிப்பிட்ட வேரியன்ட்களுக்கு ஏற்ப மாற்றம் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கியா
கியா சோனெட் மற்றும் கேரன்ஸ்:
டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்பிளே, 360 டிகிரி கேமரா மற்றும் ADAS பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் ஆகிய கூடுதல் வசதிகளுடன் புதிய சோனெட் ஃபேஸ்லிப்ட் மாடலானது விரைவில் இந்தியாவில் வெளியிடவிருக்கிறது கியா.
புதிய வசதிகளுடன் மறுசீரமைப்பு செய்யப்பட்ட சோனெட் எஸ்யூவியானது ரூ.8 லட்சம் விலையில் தொடங்கி விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செல்டோஸ் மற்றும் சோனெட்டைப் போல கேரன்ஸ் மாடலிலும் குறிப்பிட்ட சில மாற்றங்களைக் கொண்டி வந்திருக்கிறது கியா.
சோனெட் மற்றும் செல்டோஸைப் போல டிசைன் மாற்றங்கள் ஏதுமின்றி, புதிய இன்ஜின் ஒன்றைப் பெற்றிருக்கிறது கேரன்ஸ். அந்த வகையில் 158hp பவரை வெளிப்படுத்தக்கூடிய, 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன், 6-ஸ்பீடு iMT மற்றும் 7-ஸ்பீடு DCT கியர்பாக்ஸ் தேர்வுகளும் புதிய கேரன்ஸில் கொடுக்கப்பட்டிருக்கிறது.