வெளியானது எம்ஜியின் புதிய காமெட் EV.. என்ன விலை?
செய்தி முன்னோட்டம்
தங்களது புதிய காமெட் EV-யை இந்தியாவில் வெளியிட்டது எம்ஜி மோட்டார் நிறுவனம்.
எந்த செக்மெண்டிலும் சேராமல் புதிதாக ஒரு செக்மெண்டை உருவாக்கி அதில் கால் பதித்திருக்கிறது எம்ஜி. நகர கார் பயனர்களை மனதில் வைத்து இந்தப் புதிய எலக்ட்ரிக் காரை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
மாருதி ஆல்டோவை விட மிகவும் சிறியதாக இருக்கிறது காமெட். இந்திய ஆட்டோ மார்க்கெட்டிலேயே சிறியதாக 12-இன்ச் அலாய் வீல்களைக் கொண்டிருக்கிறது.
இந்த குட்டி எலெக்ட்ரிக் காரை ரூ.7.98 லட்சம் ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டிருக்கிறது எம்ஜி மோட்டார்.
நாளை (ஏப்ரல் 27) முதல் இந்தக் காரை டெஸ்ட் ட்ரைவ் செய்யலாம் என அறிவித்திருக்கும் அந்நிறுவனம், மே 15 முதல் புக்கிங்குகளையும், மே இறுதியில் டெலிவரியையும் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறது.
ஆட்டோ
இன்ஜின் மற்றும் பிற வசதிகள்:
பாக்ஸியான டிசைனுடன் இருக்கும் இந்த எலெக்ட்ரிக் காரில் இரண்டு 10.25 ஸ்கிரீன்களைக் கொடுத்திருக்கிறது எம்ஜி. ஒன்று இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டமாகவும் மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமன்ட் கிளஸ்டராகவும் இருக்கிறது.
இதில் IP67 தண்ணீர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் கொண்ட 17.3kWh பேட்டரியைக் கொடுத்திருக்கிறது. இந்த பேட்டரி 230 கிமீ ரேஞ்சை வழங்குகிறது. இத்துடன் 3.3 kW சார்ஜரும் வழங்கப்படுகிறது.
42hp பவர் மற்றும் 110Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய ஒரே ஒரு மோட்டார் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
பாதுகாப்பிற்காக ABS, EBD, ரிவர்ஸ் கேமரா மற்றும் சென்சார்கள், TPMS மற்றும் இரண்டு முன்பக்க ஏர்பேக்குகளைக் கொடுத்திருக்கிறது எம்ஜி மோட்டார்.
டாடா டியாகோ EV மற்றும் சிட்ரன் eC3 ஆகியவற்றுக்குப் போட்டியாக இந்தியாவில் வெளியாகியிருக்கிறது.