கடந்த ஆண்டு ஏப்ரலை விட இரண்டு மடங்கு அதிக விற்பனை கண்ட எம்ஜி மோட்டார்!
செய்தி முன்னோட்டம்
கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 4,551 கார்களை விற்பனை செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது எம்ஜி மோட்டார் நிறுவனம்.
இது கடந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தை விட இரண்டு மடங்கு அதிகம். கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2,008 கார்களை மட்டுமே அந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய தொடர்ந்து உழைத்து வருவதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நகர வாடிக்கையாளர்களை மையப்படுத்தி புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை கடந்த மாதம் தான் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகம் செய்தது எம்ஜி மோட்டார்.
எம்ஜி மோட்டார்
காமெட் EV:
காமெட் EV-யை கடந்த மாதம் எம்ஜி மோட்டார் அறிமுகப்படுத்திய நிலையில், அதனைத் தற்போது வாடிக்கையாளர்கள் டெஸ்ட் ட்ரைவ் செய்து பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் காமெட் EV-யை எம்ஜி வெளியிடவிருக்கும் நிலையில், அந்தக் காரின் புக்கிங்குகள் இந்த மாதம் 15-ம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
17.3 kWh பேட்டரியுடன், 230 கிமீ ரேஞ்சு கொண்ட காமெட் EV-யை 41hp பவரை வெளிப்படுத்தக்கூடிய மோட்டார் மற்றும் மூன்று டிரைவிங் மோடுகளுடன் வெளியாகவிருக்கிறது.
அதன் அடிப்படை மாடலுக்கு ரூ.7.98 லட்சம் விலையை நிர்ணயம் செய்திருக்கிறது எம்ஜி மோட்டார்.