LOADING...
குறைவான விலையில் புதிய CLA எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் கொண்டு வரவிருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ்
மெர்சிடீஸ் பென்ஸ் CLA எலெக்ட்ரிக் கார்

குறைவான விலையில் புதிய CLA எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் கொண்டு வரவிருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ்

எழுதியவர் Prasanna
Mar 10, 2026
02:11 pm

செய்தி முன்னோட்டம்

பட்ஜெட் கார் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் வழக்கத்தை விட கூடுதலான விலையில் எலெக்ட்ரிக் கார்களை வெளியிட்டு வரும் நிலையில், சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடீஸ் பென்ஸ் வழக்கத்தை விட குறைவான விலையில் புதிய காரை வெளியிடவுள்ளது. CLA என்ற சொகுசு எலெக்ட்ரிக் செடான் மாடலை அடுத்த மாதம் இந்தியாவில் வெளியிடுகிறது மெர்சிடீஸ் பென்ஸ். முன்னதாக CLA 250+ லாங் ரேஞ்சு வடிவில் மட்டுமே இந்தக் கார் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது CLA 200 ஸ்டாண்டர்டு ரேஞ்சு வேரியன்டையும் இந்தியாவில் வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வேரியன்டானது ரூ.55 லட்சம் என்ற விலையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெர்சிடீஸ் பென்ஸ்

மெர்சிடீஸ் பென்ஸ் CLA எலெக்ட்ரிக் கார்

CLA 250+ லாங் ரேஞ்சு வேரியன்டில் 85.5 kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 272 hp பவரை உற்பத்தி செய்யும் எலெக்ட்ரிக் மோட்டாரும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த செட்டப்பானது 792 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொடுக்கிறது. CLA 200 வேரியன்டோ 542 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொடுக்கும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இரண்டு மாடல்களின் பேட்டரி பேக்குகளையும் 240 kW வரையிலான அதிவேக DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்து கொள்ள முடியும். இந்தக் காரில் 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 14 இன்ச் சென்ட்ரல் டச்ஸ்கிரீன் உட்பட அனைத்து விதமான மேம்பட்ட வசதிகளையும் மெர்சிடீஸ் பென்ஸ் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement