Page Loader
இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் கார் விலை உயர்வு - ஏப்ரல் 1 முதல் அமல்!
ஏப்ரல் 1 முதல் உயரும் மெர்சிடிஸ் பென்ஸ் காரின் விலை

இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் கார் விலை உயர்வு - ஏப்ரல் 1 முதல் அமல்!

எழுதியவர் Siranjeevi
Mar 10, 2023
11:41 am

செய்தி முன்னோட்டம்

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களின் விலை 5 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரை உயரும் என தெரிவித்துள்ளது. ஜெர்மனியை சேர்ந்த ஆடம்பர கார் நிறுவனத்தின் ஒன்றான மெர்சிடிஸ் பென்ஸ் காருக்கு செம்ம மவுசு உள்ளது. இவர்கள் இந்தியாவிலும் தனது உயர் ரக ஆடம்பர கார்களை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் ஏற்கெனவே மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது கார்களின் விலையை 5% வரை உயர்த்தியது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கார்களின் விலையை மீண்டும் 5% வரை உயர்த்துவதற்கு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் கார்

மெர்சிடிஸ் பென்ஸ் கார் விலை ஏற்றம் - காரணம் என்ன?

இதனால் இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களின் விலை, 5 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரை உயரப்போகிறது. உயர்வுக்கு காரணம் என்ன? ஐரோப்பாவின் நாணயமான யூரோவின் மதிப்புக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்துவிள்ளது. இதுவே மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் கார் விலையை உயர்த்துவதற்கு முக்கிய காரணம் என மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், கார் உற்பத்திக்கான செலவுகளும் அண்மையில் அதிகரித்துள்ளன. இதை சமாளிப்பதற்காகவும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கார் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சந்தோஷ் ஐயர் தெரிவிக்கையில், இந்திய ரூபாய் மதிப்பு 87 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் எங்கள் மொத்த தொழிலும் பாதிக்கப்படுவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.