விற்பனையில் மாருதி முதலிடம் - ஆனா இந்த காருக்கு ஏற்பட்ட மவுசு யாருக்கும் இல்லை
கார் நிறுவனங்கள் கடந்த பிப்ரவரி மாதம் எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு கார்களை விற்பனை செய்துள்ளது என்பதை பற்றி பார்ப்போம். அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் மொத்தம் 2,82,799 கார்கள் விற்பனையாகியுள்ளது. இவை, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாத எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது 13.05 சதவீதம் அதிகமாகும். அதை ஒப்பிடும் போது 15.74 சதவீதம் அதிகம். 1. மாருதி இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து முதலிடத்தில் மாருதி நிறுவனம் தான் இருக்கிறது.கடந்த ஆண்டை விட 8.47 சதவீதம் அதிகம். 2. ஹூண்டாய் ஹூண்டாய் நிறுவனம், கடந்த மாதம் மொத்த 39,106 கார்களை விற்பனை செய்துள்ளது. விற்பனையை ஒப்பிடும் போது 1.08 சதவீதம் விற்பனை அதிகம்.
விற்பனையில் சக்கை போடு போட்ட கார்கள் என்னென்ன?
3. டாடா மோட்டார்ஸ் டாடா மோட்டார்ஸ் பிப்ரவரி மாதம் மட்டும் 38,965 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு விற்பனையுடன் ஒப்பிட்டால் 14.42 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. 4. மஹிந்திரா மஹிந்திரா நிறுவனம் கடந்த மாதம் 4ம் இடத்தை பிடித்துள்ளது. இதுவே கடந்தாண்டு மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது 60.73 சதவீதம் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. 5. கியா கியா நிறுவனம் பிப்ரவரி மாதம் அதிர்ஷ்டம் தான். மொத்தம் 19,554 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு விற்பனையை ஒப்பிடும் போது 43.55 சதவீதம் விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது. 6. டொயோட்டா டொயோட்டாவுக்கு அதிர்ஷ்ட மழை தான், 12,068 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாத விற்பனையுடன் ஒப்பிட்டால் 50.49 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.