இந்தியாவில் வெளியானது 'மெக்லாரன் ஆர்தூரா' ஹைபிரிட் சூப்பர்கார்!
தங்களுடைய ஆர்தூரா ஹைபிரிட் சூப்பர்காரை இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வெளியட்டிருக்கிறது மெக்லாரன். V6 இன்ஜினுடன் வெளியாகியிருக்கும் முதல் மெக்லாரன் மாட்ல ஆர்தூரா தான். மேலும், P1 மற்றும் ஸ்பீடுடெயிலை அடுத்து ஹைபிரிட் இன்ஜினுடன் வெளியாகியிருக்கும் மாடலும் ஆர்தூரா தான். கடந்த 2022-ம் ஆண்டு நவம்பரில் தான் மும்பையில் சர்வீஸ் சென்டருடன் கூடிய தங்கள் முதல் ஷோரூமை திறந்தது மெக்லாரன். தற்போது இந்தியாவில் GT மற்றும் 750S மாடலை மட்டுமே விற்பனை செய்து வருகிறது மெக்லாரன். இந்த ஆர்தூராவில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 8.0 இன்ச் டச்ஸ்கிரீன், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, டூயல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், இரண்டு USB போர்ட்கள் மற்றும் ADAS வசதிகளை அளித்திருக்கிறது மெக்லாரன்.
இன்ஜின் மற்றும் விலை:
இந்த ஆர்தூராவில் 585hp பவரை உற்பத்தி செய்யக்கூடிய 3.0 லிட்டர் ட்வின் டர்போ V6 இன்ஜினுடன், 95hp பவர் மற்றும் 225Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய எலெக்ட்ரிக் மோட்டார் ஒன்றையும் பின்பக்கம் பொருத்தியிருக்கிறது மெக்லாரன். ஒட்டுமொத்தமாக 680hp பவர் மற்றும் 720Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது இந்த பிளக்-இன் ஹைபிரிட் ஆர்தூரா சூப்பர்கார். இத்துடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸையும் வழங்கியிருக்கிறது மெக்லரான். 330 கிமீ டாப் ஸ்பீடைக் கொண்டுருக்கும் இந்த ஆர்தூரா 0-100 கிமீ வேகத்தை 3.0 நொடிகளில் எட்டிப்பிடிக்கிறது. 7.4kWh பேட்டரியுடன் முழுமையான எலெக்ட்ரிக் மோடில் 31 கிமீ ரேஞ்சைக் கொண்டிருக்கிறது. இந்த ஆர்தூராவை ரூ.5.1 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது மெக்லாரன்.