40 வருட நினைவாக மாருதி சுசுகி செலேரியோ ப்ளாக் எடிஷன் அறிமுகம்!
செய்தி முன்னோட்டம்
பிரபல கார் நிறுவனமான மாருதி சுசுகி செலேரியோ ப்ளாக் எடிஷன் காரை வெளியிட்டுள்ளது.
இந்த ப்ளாக் எடிஷன் அனைத்து கார்களுக்கும் பேர்ல் மிட்நைட் கருப்பு நிற பெயிண்ட் வழங்கப்பட்டுள்ளது. 40 வருட நினைவாக மாருதி இந்த ப்ளாக் எடிஷன் அறிமுகப்படுத்துகிறது.
தற்போது இந்த காரின் எக்ஸ்ஷோரூம் விலையாக 5.35 லட்சமாக உள்ளது. காரின் உட்புறத்தில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. ஆனால் ஏப்ரல் முதல் கார்களின் விலையை மாருதி சுசுகி அதிகரிக்க உள்ளது.
முக்கியமாக டாப் வேரியண்ட்களில் மட்டுமே பிளாக் எடிசன்களை மாருதி கொண்டுவந்துள்ளது.
இந்த காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மாருதி சுசுகி நிறுவனம்
மாருதி சுசுகியிம் செலேரியோ ப்ளாக் எடிசன் - அம்சங்கள்
காரின் சிறப்பு அம்சங்கள்
மாருதி சுசுகி செலேரியோ காரில் ORVM-கள் இன்டிகேட்டர்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் மூன்று சிலிண்டர் கொண்ட பெட்ரோல் என்ஜின் பி.எஸ். விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தோடு, 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. செலேரியோவில் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 1.0 லிட்டர் k10சி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இதைத்தவிர, ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட ஆடியோ கண்ட்ரோல்கள் மற்றும் கீலெஸ் என்ட்ரி மற்றும் ஓட்டுனருக்கு ஆட்டோ டவுன் பவர் விண்டோ வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அம்சத்திற்கு ஏர்பேக், ABS சீட் பெல்ட் ரிமைண்டர், சைல்டு ப்ரூஃப் பின்புற லாக், ஸ்டாப் லேம்ப்கள் உயரமாக பொருத்தப்பட்டுள்ளன.