இப்படி ஒரு பிரச்சினையா? காரை திரும்ப பெறும் டொயோட்டா நிறுவனம்
இந்திய சந்தையில் பிரபலமான கார்களில் ஒன்று தான் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார். கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான், டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஆனால், இந்த கார் விற்பனை செய்யப்பட்டதில் இருந்து, பழுதடைந்து திரும்ப பெற்றுக்கொண்டே இருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள்து. அதன்படி, தற்போது 4,026 அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார்களை டொயோட்டா நிறுவனம் தற்போது ரீகால் செய்துள்ளது எனவே, இதில் கார்களின் ரியர் சீட்பெல்ட் அசெம்ப்ளியில் பிரச்னை இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அர்பன் க்ரூஸர் காரை திரும்ப பெறுகிறது டொயோட்டா நிறுவனம்
இதனால், பிரச்னையை சரி செய்வதற்காக டொயோட்டா நிறுவனம் ரீகால் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒரு வேளை பிரச்சினை இருப்பது உறுதியானால், டொயோட்டா நிறுவனம் அதனை இலவசமாகவே சரி செய்து தந்து விடும். அடுத்து,மாருதி சுஸுகி நிறுவனமும் இதே பிரச்னைக்காக க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) கார்களை ரீகால் செய்துள்ளது. இந்த இரண்டும் ஒரே கார்கள் தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தியாவில், மாருதி சுசுகி கிராண்ட் விட்டாராவின் ஆரம்ப விலை ரூ. 10.45 லட்சம் மற்றும் ரூ. 19.65 லட்சம். இதற்கிடையில், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் விலை ரூ. 10.48-18.99 லட்சம் (அனைத்து விலைகள், எக்ஸ்-ஷோரூம்).