இரண்டரை வருடங்களில் 1.5 லட்சம் XUV 700 மாடல்களை விற்று மஹிந்திரா சாதனை
செய்தி முன்னோட்டம்
மஹிந்திராவின் முன்னணி எஸ்யூவி மாடலான XUV700, இந்தியாவில் கடந்த 29 மாதங்களுக்குள் 1,50,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்து ஒரு அபார சாதனை படைத்துள்ளது.
இந்த மாடல் விற்பனை ஆகஸ்ட் 2021இல் தொடங்கப்பட்டது. இந்த கார் 21 மாதங்களில் 1,00,000 யூனிட் விற்பனையையும், 12 மாதங்களில் 50,000 யூனிட்களையும் பதிவு செய்துள்ளது.
முன்னதாக, XUV700 கடந்த மாதம் வரை 1,45,888 யூனிட் விற்பனையான நிலையில், 1,50,000 மைல்கல்லை எட்ட 4,112 அளவிலான எண்ணிக்கை மட்டுமே குறைவாக இருந்தது.
இந்நிலையில், டிசம்பர் மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் இந்த இலக்கை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
XUV 700 sale records 1.5 lakhs in 2.5 years
XUV700 காரின் சிறப்பம்சங்கள்
மஹிந்திராவின் சிறந்த எஸ்யூவி மாடலான XUV700 ஆனது 5-சீட்டர் மற்றும் 7-சீட்டர் கட்டமைப்புகளில் வருகிறது.
மொத்தம் 30 வகைகளில் பரவியுள்ளது. பெட்ரோல் XUV700 ஆனது 2-லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட எம்ஸ்டாலியன் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.
2.2-லிட்டர் எம்ஹாக் டீசல் என்ஜின் இரண்டு டியூன்களில் கிடைக்கிறது. டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் விருப்பங்களுடன் வருகிறது.
நவம்பர் 2021 இல் நடந்த குளோபல் NCAP கிராஷ் டெஸ்டில் XUV700 ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
XUV700 ஆரம்ப விலை ரூ.14.01 லட்சத்தில் இருந்து அதிகபட்சம் ரூ.26.18 லட்சம் வரை உள்ளது.