Page Loader
மார்ச் மாத விற்பனையில் புதிய சாதனை படைத்த மஹிந்திரா SUV கார்கள்!
விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய மஹிந்திரா நிறுவனம்

மார்ச் மாத விற்பனையில் புதிய சாதனை படைத்த மஹிந்திரா SUV கார்கள்!

எழுதியவர் Siranjeevi
Apr 03, 2023
04:59 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல கார் நிறுவனமான மஹிந்திரா நிறுவனம் மார்ச் மாதத்தில்ல் மட்டுமே 35,976 யூனிட் எஸ்யூவிகளை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இவை 31 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. எப்போது இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியிருக்கிறது. ஒட்டுமொத்தமாக, நிறுவனம் 21 சதவீத வளர்ச்சியுடன் 66,091 யூனிட் வாகன விற்பனையைப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து M&M Ltd பிரிவின் தலைவர் வீஜய் நக்ரா தெரிவிக்கையில், SUV வணிகம், மார்ச் 2023 இல் 31% வளர்ச்சியை எட்டியுள்ளது. அதேப்போல், F23 இல், நல்ல தேவையின் பின்னணியில் 60% ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பதிவு செய்தது. இதற்காக உழைத்த டீலர்கள், பங்குதாரர்கள், சப்ளையர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

2வது இடத்தை மஹிந்திரா பெறுமா?