இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட டியூக் லைன்அப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறது கேடிஎம்
செய்தி முன்னோட்டம்
தங்களுடைய புதிய அப்டேட் செய்யப்பட்ட டியூக் லைன்அப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறது கேடிஎம். இந்தியாவில் விற்பனையாகி வரும் தங்களுடைய 390, 250 மற்றும் 125 டியூக் மாடல்களின் அப்டேட்டட் வெர்ஷன்களை தற்போது கேடிஎம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இதில் 390 மாடலானது, கவனிக்கத்தக்க பல மாற்றங்களைப் பெற்றிருக்கும் நிலையில், மற்ற இரண்டு மாடல்களும் சில டிசைன் மாற்றங்களை மட்டும் பெற்றிருக்கின்றன.
புதிய 390 மாடலில் TFT டிஸ்பிளே கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்தியாவிற்கான மற்ற இரு மாடல்களிலும் 5 இன்ச் LCD டிஸ்பிளேவே கொடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும், மியூசிக் கண்ட்ரோல், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் கால்களை கேடிஎம் செயலியின் உதவியுடன் எடுக்கும் வசதிகளுடன் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வசதியை அனைத்து புதிய மாடல்களிலும் கொடுத்திருக்கிறது கேடிஎம்.
கேடிஎம்
கேடிஎம் டியூக் லைன்அப்: இன்ஜின் அப்டேட்
மூன்று புதிய டியூக் பைக் மாடல்களையும் எட்ஜியான டிசைனுடன் வடிவமைத்திருக்கிறது கேடிஎம். மேலும், மூன்று பைக்குகளின் இன்ஜின்களையும், இந்தியாவின் புதிய மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு ஏற்ப அப்டேட் செய்திருக்கிறது கேடிஎம்.
இந்த அப்டேட்டைத் தொடர்ந்து, 390 மாடலின் பவர் 1.3hp அளவும், டார்க் 2Nm அளவும் அதிகரித்திருக்கிறது. அதே போல், 250 மாடலின் பவர் மற்றும் டார்க் அளவுகளும், 1.2hp மற்றும் 1Nm அளவு அதிகரித்திருக்கின்றன.
ஆனால், புதிய இன்ஜின் அப்டேட்டிற்குப் பிறகு 125 டியூக் மாடலின் பவர் 0.5hp அளவு அதிகரித்திருந்தாலும், டார்க்கின் அளவு 0.5Nm அளவு குறைந்திருக்கிறது.
தற்போது இந்தியாவில் விற்பனையாகும் விலைகளை விட சற்றுக் கூடுதலான விலையில் இந்த புதிய அப்டேட் செய்யப்பட்ட மாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.