யமஹா R15-க்கு செக் வைத்த கேடிஎம்! RC 160 அதிரடி அறிமுகம்; விலை இவ்வளவுதானா?
செய்தி முன்னோட்டம்
கேடிஎம் நிறுவனம் இந்திய சந்தையில் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட RC 160 மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. 160சிசி பிரிவில் ஒரு பவர்ஃபுல் ஸ்போர்ட்ஸ் பைக்கை எதிர்பார்க்கும் இளைஞர்களைக் கவரும் வகையில், இந்த பைக் நவீன அம்சங்களுடன் களமிறங்கியுள்ளது. ஜனவரி 8, 2026 நிலவரப்படி, கேடிஎம் ஆர்சி 160 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ₹1.85 லட்சம் (டெல்லி) ஆக உள்ளது. இது ஏற்கனவே விற்பனையில் உள்ள கேடிஎம் 160 Duke மாடலை விட சுமார் ₹15,000 வரை கூடுதல் விலையாகும். இந்திய சந்தையில் முன்னணியில் இருக்கும் யமஹா R15 V4 மாடலுக்கு இந்தப் புதிய பைக் கடுமையான போட்டியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்ஜின் மற்றும் செயல்திறன்
RC 160 பைக்கின் இதயமாக விளங்கும் என்ஜின் விவரங்கள்
இந்த பைக் 164.2சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு என்ஜினுடன் வருகிறது. இது 9,500 rpm-ல் 19 PS ஆற்றலை வெளிப்படுத்தும். 7,500 rpm-ல் 15.5 Nm டார்க்கை வழங்கும். 6-ஸ்பீடு கியர் பாக்ஸ் மற்றும் அசிஸ்ட் அண்ட் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி கொண்டது. நிறுவனம் ஒரு மணி நேரத்திற்கு 118 கிமீ வேகத்தை இது எட்டும் எனத் தெரிவித்துள்ளது. கேடிஎம் RC 160 அதன் முந்தைய மாடல்களான RC 200 மற்றும் RC 390 ஆகியவற்றின் அதே டிசைனைப் பின்பற்றுகிறது. முழுமையான ஏரோடைனமிக் ஃபேரிங் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப் அமைப்பு, முன்புறம் 37 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷனைக் கொண்டுள்ளது.
பைக்
யாருக்கு ஏற்ற பைக்?
320 மிமீ முன் டிஸ்க் மற்றும் 230 மிமீ பின் டிஸ்க் பிரேக் கொண்டுள்ள இந்த பைக்கில் 'சூப்பர்மோட்டோ மோட்' கொண்ட டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது. எல்சிடி இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் மற்றும் ஸ்மார்ட்போன் இணைப்பு போன்ற தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டுள்ளன. முதல்முறையாக ஸ்போர்ட்ஸ் பைக் வாங்கத் திட்டமிடும் இளைஞர்களுக்கும், டிராக்கில் பைக் ஓட்டப் பயிற்சி பெற விரும்புபவர்களுக்கும் இது ஒரு மிகச்சிறந்த தேர்வாகும். இதன் பவர்-டு-வெயிட் ரேஷியோ (Power-to-weight ratio) அதன் பிரிவில் உள்ள மற்ற பைக்குகளை விடச் சிறப்பாக உள்ளது.