Kia Seltos 2023; அற்புதமான அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகிறது!
தென் கொரிய வாகன உற்பத்தியாளரான கியா மோட்டார்ஸ் 2023 ஆம் ஆண்டின் செல்டோஸ் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் மொத்தமாக 28,634 கியா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன 2022 ஜனவரியில் விற்பனை செய்யப்பட்ட கியா கார்கள் எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில் இது 48.22% அதிகமாகும். எனவே, கடந்த 2023 ஜனவரி மாதத்திலும் வழக்கம்போல், அதிகளவில் விற்பனையான கியா காராக செல்டோஸ் முதலிடத்தை பிடித்துள்ளது. தற்போது பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் கியா நிறுவனம் 6 ஏர்பேக்குகள் மற்றும் ADAS செயல்பாடுகள் போன்ற பல பாதுகாப்பு அம்சங்களுடன் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடலை இங்கு கொண்டு வர தயராகி வருகிறது.
கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் 2023; இந்தியாவில் அறிமுகமாகும் காரின் சிறப்பு என்ன?
இந்தியா செல்லும் 2023 கியா செல்டோஸ் தற்போதைய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் (113.4hp/144Nm) மற்றும் 1.5 லிட்டர் CRDi டீசல் மோட்டார் (113.4hp/250Nm) உடன் புதிய 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட்டுடன் வழங்கப்படும். தொடர்ந்து, இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், எமெர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 2023 செல்டோஸ் காரில், காற்றோட்டமான முன் இருக்கைகள். செல்டோஸ் இரட்டை திரை அமைப்புடன் வருகிறது. கியா பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் விருப்பங்களை முன்னோக்கி கொண்டு செல்லும். விலையை பொறுத்தவரையில் இந்தியாவில் 10.69 லட்ச ரூபாய்க்குக் (எக்ஸ்-ஷோரூம்) கிடைக்கும் எனக்கூறப்படுகிறது.