
புதிய 'நின்ஜா ZX-4R' ப்ரீமியம் பைக் மாடலை இந்தியாவில் வெளியிட்டது கவாஸாகி
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் 400சிசி இன்ஜினைக் கொண்ட, தங்களுடைய 'நின்ஜா ZX-4R' ப்ரீமியம் பைக்கை வெளியிட்டிருக்கிறது கவாஸாகி. நீண்ட காலமாக இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த மாடல், இறுதியாக தற்போது வெளியாகியிருக்கிறது.
இந்தியாவில் ZX-4Rன் அடிப்படை வேரியன்டை மட்டுமே வெளியிட்டிருக்கிறது கவாஸாகி. இதன் டாப் எண்டான SE வேரியன்டையோ அல்லது ZX-4RR மாடலையோ அந்நிறுவனம் இந்தியாவில் வெளியிடவில்லை.
இந்த பைக்கிலும், ட்ரெல்லிஸ் ஃப்ரேம் செட்டப், முன்பக்கம் USD ஃபோர்க் மற்றும் பின்பக்கம் மோனோஷாக் ஆகிய ஃப்ரேம் மற்றும் சஸ்பென்ஷன் செட்டப்பே வழங்கப்பட்டிருக்கிறது. ஸ்போர்ட், ரெய்ன், ரோடு மற்றும் கஸ்டமைசபிள் ரைடிங் மோடு என நான்கு ரைடிங் மோடுகளைக் கொண்டிருக்கிறது நின்ஜா ZX-4R.
கவாஸாகி
கவாஸாகி நின்ஜா ZX-4R: இன்ஜின் மற்றும் விலை
இந்த புதிய பைக்கில், அதிகபட்சமாக 80hp பவர் மற்றும் 39Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 399சிசி லிக்வி-்-கூல்டு இன்லைன்-ஃபோர் இன்ஜினைக் கொடுத்திருக்கிறது கவாஸாகி. ஆனால், அதிகபட்ச பவரை 14,500rpm-லேயே வெளிப்படுத்துகிறது இந்த ZX-4R.
ட்வின் டிஸ்க் பிரேக்குகளுடன் டூயல் சேனல் ABS வசதி ஸ்டாண்டர்டாகக் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த நின்ஜா ZX-4R பைக்கை, இந்தியாவில், ரூ.8.49 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியிருக்கிறது கவாஸாகி.
இந்த விலையானது கவாஸாகியின் பெரிய இன்ஜின் வெர்சிஸ் 650 பைக்கை விட அதிகம். மேலும், கவாஸாகியின் 948சிசி இன்ஜின் கொண்ட Z900 ஸ்ட்ரீட் நேக்கட் பைக்கை விட ரூ.71,000 மட்டுமே குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.