இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் கவாஸாகி நிஞ்ஜா 500இன் டீசர் வெளியீடு
இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் கவாஸாகி நிஞ்ஜா 500இன் ஸ்னீக் பீக்கை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது கவாஸாகி நிறுவனம். நிஞ்ஜா 400க்கு பதிலாக வெளியாக இருக்கும் 2024 நிஞ்ஜா 500, ஏற்கனவே ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அறிமுகமாகிவிட்டது. EICMA 2023 இல் வெளியிடப்பட்ட இந்த மோட்டார் பைக், அப்ரிலியா RS 457, யமஹா R3, கேடிஎம் RC 390 மற்றும் BMW G 310 RR ஆகிய மாடல்களுக்கு போட்டியாக வரவுள்ளது. ஐரோப்பிய சந்தைகளில் நிஞ்ஜா 500ஐ வெற்றிகரமாக அறிமுகப்படுத்திய கவாஸாகி நிறுவனம், ஏப்ரல் மாதத்திற்குள் இந்தியாவில் அந்த பைக்கை அறிமுகப்படுத்த உள்ளது.
கவாஸாகி நிஞ்ஜா 500இன் சிறப்பம்சங்கள்
MY-2024வடிவத்தில் வெளியாக உள்ள நிஞ்ஜா 500, இணை-இரட்டை இயந்திரம் மற்றும் புளூடூத் இணைப்புடன் முழு வண்ண TFT கிளஸ்டரைக் கொண்டுள்ளது. 2024 கவாஸாகி நிஞ்ஜா 500இல், 14-லிட்டர் எரிபொருள் டேங்க், இரட்டை-பாட் LED ஹெட்லேம்ப்புகள், ஒரு விண்ட்ஸ்கிரீன், ஒரு கிளிப்-ஆன் ஹேண்டில்பார், ஒரு அப்ஸ்வெப்ட் எக்ஸாஸ்ட், ஸ்பிளிட்-டைப் இருக்கைகள் மற்றும் ஒரு நேர்த்தியான LED டெயில்லாம்ப் ஆகியவை உள்ளன. 17-இன்ச் ஃபோர்ஜ் செய்யப்பட்ட சக்கரங்கங்கள், பின்புறத்தில் அகலமான 150-பிரிவு டன்லப் ஸ்போர்ட்மேக்ஸ் டயர்கள் ஆகியவை இந்த மாடல் மோட்டார் பைக்கின் சிறப்பம்சமாகும். கவாஸாகி நிஞ்ஜா 500இல் உள்ள இன்டெலிஜென்ட் ப்ராக்ஸிமிட்டி ஆக்டிவேஷன் ஸ்டார்ட் சிஸ்டம்(கிபாஸ்) சாவியை பயன்படுத்தாமலேயே நிஞ்ஜா 500ஐ ஸ்டார்ட் செய்ய அனுமதிக்கிறது.