இந்தியாவில் வெளியாகியிருக்கும் கவாஸாகியின் புதிய 'டர்ட் பைக்குகள்'
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் 'KX 84' மற்றும் 'KLX 300R' ஆகிய இரண்டு டர்ட் மோட்டார்பைக்குகளை வெளியிட்டிருக்கிறது ஜப்பானைச் சேர்ந்த ப்ரீமியம் பைக் தயாரிப்பாளரான கவாஸாகி.
இந்த இரண்டு பைக்குகளையும் CBU (Completely Built Unit) முறையில் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
மேற்கூறிய இரண்டு பைக்குகளுமே இந்திய சாலைகளில் ஓட்டும் தகுதியுடையவை கிடையாது. அதாவது, அதற்கென ஒதுக்கப்பட்ட களங்களில் மட்டுமே இயக்கும் தகுதி பெற்ற பைக்குகள். இவற்றை இந்திய சாலைகளில் இயக்க அனுமதி இல்லை.
இந்தியாவில் மோட்டர்ஸ்போர்ட்டை ஊக்குவிக்கும் வகையில், சிறியவர்கள் மற்றும் வளர்ந்து வரும் ரைடர்களுக்காகவே இந்த பைக்கை வெளியிட்டிருக்கிறது கவாஸாகி.
டர்ட் பைக்
கவாஸாகி KX 85: வசதிகள் மற்றும் விலை
இந்த KX 85 டர்ட் பைக்கில், ஒரே ஒரு சிலிண்டர் கொண்ட, 84சிசி டூ ஸ்ட்ரோக் இன்ஜினைப் பயன்படுத்தியிருக்கிறது கவாஸாகி.
6 ஸ்பீடு கியர்பாக்ஸூடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜினானது ட்யூபுலார் செமி டபுள் கிரேடில் ஃபிரேமில் பொருத்தப்பட்டிருக்கிறது.
இந்த பைக்கின் முன்பக்கம் 36மிமீ இன்வெர்டட் கார்ட்ரிட்ஜ் சஸ்பென்ஷனும், பின்பக்கம் முழுவதும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளக்கூடிய ஷாக் அப்சர்பர்களுடன் கூடிய யுனி ட்ராக் சஸ்பென்ஷன் செட்டப்பும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
பாதுகாப்பிற்காக முன்பக்கம் 202மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் 150மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த KX 85 பைக்கை இந்தியாவில் ரூ.4.20 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டிருக்கிறது கவாஸாகி.
கவாஸாகி
கவாஸாகி KLX 300R: வசதிகள் மற்றும் விலை
புதிய KLX 300R பைக்கில், ஒரே ஒரு சிலிண்டர் கொண்ட, 292சிசி லிக்விட் கூல்டு நான்கு ஸ்ட்ரோக் இன்ஜினைக் கொடுத்திருக்கிறது கவாஸாகி.
நான்கு வகையில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளக்கூடிய ஹேண்டில் பார்களைக் கொண்டிருக்கும் இந்த பைக்கில், முன்பக்கம் 43மிமீ இன்வெர்டட் ஃபோர்க் சஸ்பென்ஷனும், பின்பக்கம் யுனி ட்ராக் சிங்கிள் ஷாக் சஸ்பென்ஷன் செட்டப்பும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
பாதுகாப்பிற்காக முன்பக்கம் 270மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் 240மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த KLX 300R பைக்கை, இந்தியாவில் ரூ.5.60 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டிருக்கிறது கவாஸாகி.