LOADING...
ஒரே சார்ஜில் 473 கிமீ! இந்தியாவில் கால் பதிக்கும் ஜீப்பின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி டிசைன் பேட்டண்ட் பதிவு
இந்தியாவில் ஜீப் வேகனீர் எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி டிசைன் பேட்டண்ட் பதிவு

ஒரே சார்ஜில் 473 கிமீ! இந்தியாவில் கால் பதிக்கும் ஜீப்பின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி டிசைன் பேட்டண்ட் பதிவு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 07, 2026
05:15 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஜீப், தனது முதல் உலகளாவிய எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலான வேகனீர் எஸ்ஸின் வடிவமைப்பிற்கான காப்புரிமையை இந்தியாவில் பதிவு செய்துள்ளது. தற்போது காம்பஸ், மெரிடியன் போன்ற எரிபொருள் கார்களை விற்பனை செய்து வரும் ஜீப், இந்த புதிய நடவடிக்கையின் மூலம் இந்திய மின்சார வாகனச் சந்தையில் நுழையத் திட்டமிட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-

செயல்திறன்

செயல்திறன் மற்றும் வேகம்

STLA லார்ஜ் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார், அதீத வேகம் மற்றும் ஆற்றலைக் கொண்டது. இதன் வேகம் வெறும் 3.5 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது. இதன் டூயல் மோட்டார் அமைப்பு 600 எச்பி குதிரைத்திறனையும், 800 நிமீ டார்க் விசைத்திறனையும் வெளிப்படுத்துகிறது. 100 கிலோவாட் பேட்டரி பேக் கொண்ட இந்த கார், ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 473 கிமீ தூரம் வரை செல்லும். 20-80% சார்ஜ் செய்ய வெறும் 23 நிமிடங்களே ஆகும்.

தொழில்நுட்பம்

நவீன வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம்

ஜீப் நிறுவனத்தின் வரலாற்றிலேயே மிகக் குறைந்த காற்றுத் தடை (Drag Coefficient 0.29) கொண்ட கார் இதுவாகும். உள் அலங்காரம் 12.3 இன்ச் டூயல் ஸ்கிரீன்கள், பயணிகளுக்கான தனி திரை (10.25 இன்ச்) மற்றும் 19 ஸ்பீக்கர்களைக் கொண்ட மெக்கின்டோஷ் ஆடியோ சிஸ்டம் எனத் தொழில்நுட்ப வசதிகள் நிறைந்துள்ளன. 4,887 மிமீ நீளம் கொண்ட இந்த கார், கிராண்ட் செரோகி மாடலை விட சற்று சிறியது. இந்தியாவில் இந்த கார் அறிமுகமாகும் பட்சத்தில், இது மெர்சிடிஸ் பென்ஸ் EQE மற்றும் பிஎம்டபிள்யூ iX போன்ற சொகுசு எலக்ட்ரிக் கார்களுக்குப் போட்டியாக அமையும். ஜீப் நிறுவனம் இதனை இந்தியாவில் நேரடியாக இறக்குமதி செய்தோ அல்லது உள்நாட்டிலேயே பாகங்களை இணைத்தோ விற்பனை செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement