NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / பெங்களூரில் சோதனையில் உள்ள ஜப்பானிய போக்குவரத்து சிக்னல் தொழில்நுட்பம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெங்களூரில் சோதனையில் உள்ள ஜப்பானிய போக்குவரத்து சிக்னல் தொழில்நுட்பம்
    2023ஆம் ஆண்டில் உலகளவில் நெரிசல் மிகுந்த நகரங்களில் பெங்களூரு 6வது இடத்தைப் பிடித்தது

    பெங்களூரில் சோதனையில் உள்ள ஜப்பானிய போக்குவரத்து சிக்னல் தொழில்நுட்பம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 12, 2024
    05:48 pm

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூரில் உள்ள கென்சிங்டன் சாலை மற்றும் மர்பி சாலை சந்திப்பில் ஜப்பானின் MODERATO தொழில்நுட்பத்தால் ஈர்க்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த புதுமையான அமைப்பு, மார்ச் 2024க்குள் ஓசூர் சாலை, எம்ஜி சாலை மற்றும் பழைய மெட்ராஸ் சாலை ஆகிய 28 முக்கிய சந்திப்புகளில் செயல்படுத்தப்பட உள்ளது.

    நகர்ப்புற நிலப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டியுஎல்டி) ஆணையர் தீபா சோழன் கூறுகையில்,"கென்சிங்டன் சாலை மற்றும் மர்பி சாலை சந்திப்பில் உள்ள சிக்னல் நிறுவல் மற்றும் மாறுதல் நடைமுறைகளைச் சரிபார்க்க தற்காலிகமாக இயக்கப்பட்டு வருகிறது." என்றார்.

    இந்த ரூ. 72-கோடி திட்டமானது ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தால் (JICA) நிதியளிக்கப்படுகிறது மற்றும் ஜப்பானிய நிறுவனமான Nagoya Electric Works Company Limited மூலம் செயல்படுத்தப்படுகிறது.

    செயல்பாடு

    புதிய அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது?

    ஆரம்பத்தில் 2014 இல் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், பல்வேறு சவால்கள் காரணமாக பல தாமதங்களைச் சந்தித்த பிறகு, கடந்த ஜூலை 2021 இல் தான் அமலுக்கு வந்தது.

    அடாப்டிவ் ட்ராஃபிக் சிக்னல் கண்ட்ரோல் சிஸ்டம் (ATSCS) சரியான சூழ்நிலையில் சந்திப்புகளில் ஏற்படும் தாமதங்களை, 13% மற்றும் வரிசையில் 30% குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    இந்த அமைப்பில் ஓட்டுநர்கள்/பாதசாரிகளுக்கான சிக்னல்கள், முக்கியமான சந்திப்புகளில் வரிசை நீள அளவீட்டு அமைப்பு மற்றும் வாகன இயக்கத்தைக் கண்காணிப்பதற்கான தானியங்கி போக்குவரத்து கவுண்டர் ஆகியவை உள்ளன.

    பெங்களூரில் உள்ள சந்திப்புகளில் சிக்னல் நேரத்தை நிகழ்நேர மேம்படுத்துவதற்கு ஒரு மத்திய கட்டுப்பாட்டு மென்பொருள் பயன்படுத்தப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    ஜப்பான்
    போக்குவரத்து விதிகள்
    போக்குவரத்து

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு
    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்

    பெங்களூர்

    திடீரென்று பற்றி எரிந்த 40க்கும் மேற்பட்ட பேருந்துகள்: பெங்களூரில் பரபரப்பு  விபத்து
    பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை: மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்  காவல்துறை
    தீவிரமடையும் மராத்தா இடஒதுக்கீடு போராட்டங்கள்: மும்பை-பெங்களூரு போக்குவரத்து பாதிப்பு, ரயில்கள் நிறுத்தம்  மும்பை
    பெங்களுரில் உலவும் சிறுத்தையால் பரபரப்பு: உங்கள் பகுதியில் சிறுத்தையைக் கண்டால் என்ன செய்ய வேண்டும்? வனத்துறை

    ஜப்பான்

    பிபா மகளிர் உலகக்கோப்பை : 4-0 கோல்கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது ஜப்பான் கால்பந்து
    'காவாலா' பாடலுக்கு நடனமாடும் இந்தியாவுக்கான ஜப்பான் தூதர்  ஜெயிலர்
    அணு மின் நிலையத்தின் நீரை ஆக.24ஆம் தேதி கடலில் கலக்கவிட ஜப்பான் திட்டம் சீனா
    சந்திரயான் 4: நிலவின் தண்ணீரின் இருப்பை ஆய்வு செய்ய ஜப்பானுடன் கைகோர்க்கும் இந்தியா சந்திரயான்

    போக்குவரத்து விதிகள்

    சென்ற ஆண்டு, சீட் பெல்ட் அணியாததால், சாலை விபத்துகளில் 16,000க்கும் மேல் உயிரிழந்துள்ளனர் வாகனம்
    ஜனவரி 10 வரை, பாம்பன் பாலத்தின் மேல் ரயில்கள் செல்ல தடை ரயில்கள்
    'தாழ்த்தள பேருந்துகள் இயக்குவது சாத்தியமில்லை' என நீதிமன்றத்தில் போக்குவரத்துத்துறை தகவல் தமிழ்நாடு
    தமிழகத்தில் பேருந்து படியில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் - போக்குவரத்துத்துறை தமிழ்நாடு

    போக்குவரத்து

    போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக்: நாளை பேருந்துகள் இயங்கும் என அமைச்சர் உறுதி வேலைநிறுத்தம்
    பஸ் ஸ்ட்ரைக்: மதுரை தவிர மற்ற ஊர்களில் பேருந்துகள் வழக்கம்போல இயக்கம் வேலைநிறுத்தம்
    பஸ் ஸ்ட்ரைக்: பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்துள்ள ஊழியர்களுக்கு மெமோ வேலைநிறுத்தம்
    போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ் வேலைநிறுத்தம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025