சுமூகமான ரயில் பயணத்திற்கு இந்த விதிகளை பின்பற்றவும்: IRCTC அறிவிப்பு
இந்திய இரயில்வே சென்ற மாதம், பெர்த்கள் மற்றும் இருக்கை வசதிகளை பயன்படுத்த சில விதிகளை அறிவித்தது. அதன் விபரங்கள் பின்வருமாறு: சென்ற ஆண்டின் நெறிமுறைப்படி, இரவு 10 மணிக்கு மேல் டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட கூடாது. எனினும் இந்த விதி, 10 மணிக்கு மேல், ரயிலில் பயணத்தை தொடங்கும் பயணிகளுக்கு பொருந்தாது. மிடில் பெர்த்தில் பிரயாணம் செய்பவர்களுக்கு, இரவு 10 மணிக்கு முதல் காலை 6 மணி வரை தான் பெர்த் பயன்படுத்த அனுமதி. கீழ் பெர்த்தில் இருப்பவர்கள் அசௌகரியமாக உணரக்கூடாது என்பதற்காக இந்த விதி. பிரயாணம் தொடங்கி 1 மணிநேரம் கழித்தோ, 2 ஸ்டேஷன்கள் கடந்த பிறகு தான், எஞ்சி இருக்கும் டிக்கெட்டுகளை RAC பயணிகளுக்கு ஒதுக்க வேண்டும்.
புதிய ரயில் பயண விதிகள்
இரவு நேரங்களில் சத்தமாக பேசவோ, ஹெட் போன்ஸ் இல்லாமல் மொபைல்-இல் இசை கேட்கவோ அனுமதி கிடையாது. சக பிரயாணிகளின் உறக்கத்திற்கு தொந்தரவு தரும் வகையில் இதை செய்தால், கோச்சில் உள்ள IRCTC ஊழியர்கள் யார் வேண்டுமானாலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி உள்ளது. ரயிலில் பயணிக்கும் போது, சத்தமாக பாட்டு கேட்பது, சத்தமாக பேசிக் கொண்டிருப்பது போன்ற பல புகார்கள் வந்ததன் காரணமாக, ரயில்வே துறை இத்தகைய விதியை அறிவித்துள்ளது. ரயில் பயணத்தின் போது இந்த விதிகள், முறையாக பின்பற்றுவதை, ரயில் டிக்கெட் பரிசோதகர் மற்றும் பராமரிப்பு ஊழியர்களும் உறுதி செய்ய வேண்டும்.