ஒலிம்பிக்கில் வெல்லும் இந்தியர்களுக்கு எம்ஜி வின்ட்சர் சியூவி; சஜ்ஜன் ஜிண்டால் அறிவிப்பு
ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான சஜ்ஜன் ஜிண்டால், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர்கள் அனைவருக்கும் எம்ஜி வின்ட்சர் கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் சமீபத்தில் புதிய எம்ஜி வின்ட்சர் சியூவி'ஐ (Crossover Utility Vehicle) அறிமுகப்படுத்தியுள்ளது. இது அரச பாரம்பரியத்தின் சின்னமான வின்ட்சர் கேசில் காரை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சியூவி கார் விரைவில் இந்திய சந்தைக்கு வரும். ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா என்பது ஜேஎஸ்டபிள்யூ குழுமம் மற்றும் பிரிட்டிஷ் வாகன தயாரிப்பு நிறுவனமான மோரீஸ் கேரேஜஸ் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
எம்ஜி வின்ட்சர் சியூவி காரின் சிறப்பம்சங்கள்
நவீன வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் சியூவி ஆனது நேர்த்தியான எல்இடி ஹெட்லைட்களை கொண்டுள்ளது. கூடுதலாக, புதிய அலாய் வீல் வடிவமைப்பு மற்றும் சன்ரூஃப் ஆகியவை இதில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில வளைவுகள் மற்றும் ஃப்ளஷ் கதவு கைப்பிடிகளுடன் இதன் வெளிப்புற வடிவமைப்பு எளிமையாக இருக்கும். தற்போது வரை, இந்த மாடலின் இந்திய பாதிப்பிற்கு பேட்டரி குறித்த விபரங்கள் தெரியவில்லை. அதே நேரம், வெளிநாட்டு சந்தைகளுக்காக தயாரிக்கப்படும் கார்களில் 37.9கிலோவாட் பேட்டரியுடன் 360கிமீ வரம்பிலும், 50.6கிலோவாட் பேட்டரியுடன் 460கிமீ வரம்பில் இரண்டு வேரியண்ட்களில் தயாரிக்கப்படுகிறது. பாரீஸில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை மனு பாக்கர் மற்றும் ஸ்வப்னில் குசலே ஆகிய இருவர் மட்டும் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.