Page Loader
சாலை விபத்துக்களில் பாதிக்கப்படுவோருக்கு இலவச மருத்துவ சிகிச்சை, மத்திய அரசின் புதிய திட்டம்
சாலை விபத்துக்களில் பாதிக்கப்படுவோருக்கு இலவச மருத்துவ சிகிச்சை, மத்திய அரசின் புதிய திட்டம்

சாலை விபத்துக்களில் பாதிக்கப்படுவோருக்கு இலவச மருத்துவ சிகிச்சை, மத்திய அரசின் புதிய திட்டம்

எழுதியவர் Prasanna Venkatesh
Dec 05, 2023
09:13 am

செய்தி முன்னோட்டம்

உலகளவில் அதிக சாலை விபத்துகளை சந்திக்கும் நாடுகளில் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது இந்தியா. இங்கு சாலை விபத்துக்களைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும், தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை. இந்நிலையில், சாலை விபத்துக்களில் பாதிக்கப்படுபவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள் செயல்பாட்டிற்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறது மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை. இந்தத் திட்டமானது 2019ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் ஒரு பிரிவாக சேர்க்கப்பட்டிருந்தாலும், அது தற்போது தான் அமல்படுத்தும் நிலையை எட்டியிருக்கிறது. தேசிய அளவில் இதனை வெற்றிகரமாக செயல்பாட்டிற்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறது மத்திய அமைச்சகம்.

இந்தியா

இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை: 

2022ம் மட்டும் இந்தியாவில் ஏற்பட்ட 461,312 சாலை விபத்துக்களின் மூலம் 168,491 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், 443,366 பேர் இந்த சாலை விபத்துக்களில் காயமடைந்திருக்கிறார்கள். இந்த விபத்துக்கள் ஏற்படுத்துவதற்கு 71.2% அதிவேக வாகனப் பயணமே காரணமாக அமைந்திருக்கிறது. இதனைத் தவிர்த்து தவறான பாதையில் வாகனத்தை இயக்கியது, டிராஃபிக் விதிகளை மீறியது மற்றும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட காரணங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 50% சாலை விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, சாலைகளின் அடிப்படைக் கட்டமைப்பிலிருந்தே சாலை விபத்துக்களை தவிர்ப்பதற்கான திட்டங்களுடன் கட்டுமானங்களை கட்டமைக்கத் மத்திய அமைச்சகம் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.