Page Loader
எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை உயர்கிறதா?
மாற்றத்தைக் காணவிருக்கும் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தை

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை உயர்கிறதா?

எழுதியவர் Prasanna Venkatesh
May 21, 2023
03:28 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தை நிறைய மாற்றங்களைக் காணவிருப்பதாக நிபுணர்கள் கூறியிருக்கின்றனர். மக்களிடம் எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், குறைவான விலையில் எலெக்ட்ரிகா வாகனங்களை நிறுவனங்கள் விற்பனை செய்யவும் FAME திட்டத்தை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு. இந்தத் திட்டத்தின் மூலம் 40% சலுகை விலையில் நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து, அதனை அரசிடம் FAME சலுகையின் கீழ் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், தற்போது FAME II மானியத்தை kWh-க்கு ரூ.15,000-ல் இருந்து ரூ.10,000-ஆகக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. மேலும் அதிகபட்ச மானியமத்தை 40%-ல் இருந்து 15%ஆகக் குறைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இந்த மாற்றங்களும் நடப்பு நிதியாண்டிற்கு மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

எலெக்ட்ரிக் வாகனம்

உயரும் எலெக்ட்ரிக் வாகன விலை: 

மார்ச் 2024-ல் முடிவடையும் நடப்பு நிதியாண்டிற்குப் பிறகு FAME II மானிய திட்டத்தை மத்திய அரசு நிறுத்தலாம் எனத் தெரிகிறது. மானியம் கொடுக்கப்படுவதால் மட்டுமே எலெக்ட்ரிக் வாகனங்களை ஓரளவு குறைந்த விலையில் எலெக்ட்ரிக் வாகன நிறுவனங்களால் கொடுக்க முடிகிறது. மேலும், தற்போது குறைக்கப்பட்டிருக்கும் மானிய அளவை ஈடுசெய்ய தங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களில் வழங்கும் பிற வசதிகளை நீக்கியும், பேட்டரி அளவைக் குறைத்தும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாடு அதிகரிக்கவும், மக்களுக்கு குறைவான விலையில் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்யவும் மத்திய அரசு குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்காவது FAME II திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.