இந்தியாவின் அதிவேக சார்ஜிங் கொண்ட புதிய போன்; Infinix Zero Ultra
சென்ற செப்டம்பரில் சந்தையில் அறிமுகமான, இன்பினிக்ஸ் ஜீரோ 20 (Infinix Zero 20 ) மற்றும், அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட்ட இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா (Infinix Zero Ultra), இரண்டும் இப்போது விற்பனைக்கு வரவுள்ளது. இந்திய சந்தையில் உள்ள போன்களிலேயே அதிவிரைவாக சார்ஜிங் செய்யலாம் என்ற பெருமையுடன் அறிமுகம் ஆகும் இந்த போன்கள், டிசம்பர் 25 முதல் ஆன்லைன்-இல் விற்பனைக்கு வரவுள்ளது. ஜீரோ அல்ட்ரா, காஸ்லைட் சில்வர் மற்றும் ஜெனிசிஸ் நோயர் என்று இரு வண்ணங்களிலும், 8ஜிபி & 256ஜிபி ஸ்டோரேஜ்-இல் வருகிறது. இந்தியாவில் அறிமுக விலையாக ரூ.29,999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 180W வயர்டு சார்ஜிங்குடன் 4,500 mAh பேட்டரியைக் கொண்டு, இந்தியாவிலேயே, வேகமாக சார்ஜ் செய்யும் ஸ்மார்ட்போன் என்ற பெயர் பெறுகிறது.
அதிவேக சார்ஜிங் கொண்ட Infinix Zero Ultra
Infinix நிறுவனத்தின் கூற்றுப்படி, ஜீரோ அல்ட்ரா, GaN சார்ஜர் மூலம், 12 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம். ஜீரோ அல்ட்ரா, ஆண்ட்ராய்டு 12-அடிப்படையிலான XOS 12 இல் இயங்குகிறது. இது 6.8" FullHD 120Hz, AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், கைரேகை சென்சார் (fingerprint sensor ) பொருத்தப்பட்டுள்ளது. இதன் முன்பக்க கேமரா, 32MP அளவுடன், பஞ்ச் ஹோல் வடிவிலும், பின்புறம், OIS உடன் 200MP கேமராவும் அமையப்பெற்றுள்ளது. மறுபுறம்,இன்பினிக்ஸ் ஜீரோ 20, 45W வயர்டு சார்ஜிங்குடன் 4,500 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது XOS 12 கொண்டு வடிவமைக்கபெற்ற, 4G ஸ்மார்ட்ஃபோன் ஆகும். இந்த போனில் முன்பக்கதில் கைரேகை ஸ்கேனர் இல்லை. ஆனால், போனின் வலதுபுறம் உள்ள பவர் பட்டனுடன்,ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது.