ரயிலில் அனுப்பப்படும் பார்ஸல்கள் இனி உங்கள் இல்லம் தேடி வரப்போகிறது
செய்தி முன்னோட்டம்
பொதுவாக நாம் ரயில் சேவை மூலம் சரக்குகள் அனுப்ப, அந்த ஊரில் உள்ள ரயில்வே ஸ்டேஷனிற்கு நேரில் சென்று பதிவு செய்து அனுப்ப வேண்டும்.
அதேபோல், நமக்கு அனுப்பப்படும் சரக்குகளை, நேரில் சென்று, கையெழுத்து இட்டு, தான் வாங்கி வர வேண்டும்.
வெளியூர்களுக்கு அனுப்பப்படும் கடிதங்களும், கூரியர்களும் தபால்துறை மூலமும் அனுப்பலாம். வெளி மாநிலங்களுக்கு செல்பவை ரயில் மெயில் மூலம் அனுப்பப்படுகின்றன.
இப்போது ரயில் துறையும், இந்தியா போஸ்ட்டும் கை கோர்த்து வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்தியா போஸ்ட், வாடிக்கையாளர்களிடமிருந்து, சரக்குகளைப் பெற்று ரயில் மூலம் அனுப்பும். அந்த பார்சல் இலக்கை அடைந்தபின், அதை ரயில் நிலையத்தில் இருந்து பெற்று, சேர்ப்பிக்க வேண்டிய வாடிக்கையாளரிடம் தானே சேர்க்கிறார்கள்.
மேலும் படிக்க
ரயில் மெயில் மற்றும் இந்திய அஞ்சல் சேவை
இத்தகைய சேவை ஏற்கனவே, சூரத் - வாரணாசி இடையே செயல்படும் தப்தி கங்கா எஸ்பிரஸில் நடைமுறையில் உள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி முதல், இத்திட்டம், சென்னை, மதுரை மற்றும் கோவை கோட்டத்தில் நடைமுறை படுத்தவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்காக, 16 கலெக்ஷன் பாய்ண்ட்கள் தேர்ந்தெடுக்க பட்டுள்ளன எனவும், அங்கு ஒரு சேவை நிலையம் அமையவுள்ளதாகவும், மக்கள் தங்கள் அருகாமையில் அமைய பெற்றிருக்கும் சேவை நிலையத்தை தேர்வு செய்ய ஒரு செயலியையும் விரைவில் அறிமுகப்படுத்த போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த நிலையத்தில் செயல்படும் தபால் துறை அலுவலர்கள், பார்சல்களை ஸ்கேன் செய்து, பொருட்களின் தன்மையை உறுதிப்படுத்தும் ஆவணம் ஒன்றை வழங்குவர். பேக்கேஜிங்கிற்கான விலை Rs.6 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதோடு GST வரியும் கூடுதலாக பெறப்படும்.