ஐரோப்பிய சந்தையில் i20 ஃபேஸ்லிப்டை அறிமுகப்படுத்தியது ஹூண்டாய்.. இந்தியாவிலும் வெளியாகுமா?
செய்தி முன்னோட்டம்
ஐரோப்பிய சந்தைக்கான i20 ஹேட்ச்பேக் மாடலின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹூண்டாய் நிறுவனம்.
புதிய இன்ஜின், சின்னச் சின்ன டிசைன் மாற்றங்கள், கூடுதல் வசதிகள் என ஒரு முழுமையான பேக்கேஜாக இந்த புதிய ஃபேஸ்லிப்டில் அப்டேட்களை வழங்கியிருக்கிறது ஹூண்டாய்.
டிசைனைப் பொறுத்தவரை பம்பர்கள் மறுவடிவம் செய்யப்பட்டிருக்கின்றன, ஸ்போர்ட்டியான கிரில் கொடுக்கப்பட்டிருக்கிறது மற்றும் பக்கவாட்டில் இருந்து பார்க்கும் போது ஸ்டார் வடிவ 16 (அ) 17-இன்ச் ரிம் தனித்துத் தெரிகிறது.
மூன்று புத்தம் புதிய கலர் ஆப்ஷன்கள் மற்றும் இரண்டு டூயல் டோன் கலர் ஆப்ஷன்களுடன் மொத்தம் எட்டு கலர்களில் புதிய i20 ஹேட்ச்பேக் மாடலை அறிமுகம் செய்திருக்கிறது ஹூண்டாய். சிலர் கலர்களுடன் ப்ளாக் ரூஃப் காம்பினேஷனும் இருக்கிறது.
ஹூண்டாய்
இன்ஜின் மற்றும் பிற வசதிகள்:
அப்கிரேடு செய்யப்பட்ட 4.2-இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் பேனலைப் பெற்றிருக்கிறது i20 ஹேட்ச்பேக். இதனை வேண்டும் என்பவர்கள் 10.25-இன்சிற்கு அப்டேட் செய்து கொள்ளும் வசதியையும் அளித்திருக்கிறது.
புதிய i20 என்பதால், புதிய 1.0 லிட்டர் T-GDi பெட்ரோல் இன்ஜினைப் பயன்படுத்தியிருக்கிறது ஹூண்டாய். 120hp பவர் மற்றும் 100Nm டார்க்கை வெளிப்படுத்தும் இந்த இன்ஜினுடன், 6-ஸ்பீடு iMT மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7-ஸ்பீடு DCT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை வழங்குகிறது.
ஆண்ட்டி-கொலிஷன சிஸ்டம், பிளைண்டு ஸ்பாட் டிடெக்ஷன் மற்றும் ஸ்மார்ட் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு ADAS பாதுகாப்ப அம்சங்களை இந்த ஃபேஸ்லிப்டில் கொடுத்திருக்கிறது ஹூண்டாய்.
இந்த i20 ஃபேஸ்லிப்ட் மாடலை இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவிலும் ஹூண்டாய் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.