Page Loader
தீபிகா படுகோனை பிராண்டு அம்பாஸிடராக அறிவித்த ஹூண்டாய் இந்தியா நிறுவனம் 
தீபிகா படுகோனை பிராண்டு அம்பாஸிடராக அறிவித்த ஹூண்டாய் இந்தியா நிறுவனம்

தீபிகா படுகோனை பிராண்டு அம்பாஸிடராக அறிவித்த ஹூண்டாய் இந்தியா நிறுவனம் 

எழுதியவர் Prasanna Venkatesh
Dec 30, 2023
11:02 am

செய்தி முன்னோட்டம்

தங்கள் நிறுவனத்தின் புதிய மற்றும் கூடுதல் பிராண்டு அம்பாஸிடராக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை நியமித்திருக்கிறது ஹூண்டாய் இந்தியா நிறுவனம். ஏற்கனவே ஹூண்டாய் நிறுவனத்தின் பிராண்டு அம்பாஸிடராக பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் இருந்து வரும் நிலையில், தற்போது தீபிகா படுகோனையும் கூடுதலாக நியமித்திருக்கிறது ஹூண்டாய். உலகில் அதிக செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியலில் ஒருவராக தீபிகா படுகோனை டைம்ஸ் இதழ் தேர்ந்தெடுத்திருக்கும் நிலையில், அவரை தங்களுடைய பிராண்டு அம்பாஸிடராக அறிவித்திருக்கிறது ஹூண்டாய். தீபிகா படுகோனை பிராண்டு அம்பாஸிடராக நியமித்ததற்காக ஹூண்டாய் நிறுவனமும், தன்னை பிராண்டு அம்பாஸிடராக அறிவித்ததற்காக தீபாக படுகோனும் பரஸ்பரம் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர். இந்தியாவில் 13-க்கும் மேற்பட்ட கார் மாடல்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் எக்ஸ் பதிவு: