NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / அமெரிக்காவில் EV உற்பத்தியை இரட்டிப்பாக்கியது ஹூண்டாய் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்காவில் EV உற்பத்தியை இரட்டிப்பாக்கியது ஹூண்டாய் 

    அமெரிக்காவில் EV உற்பத்தியை இரட்டிப்பாக்கியது ஹூண்டாய் 

    எழுதியவர் Sindhuja SM
    May 25, 2024
    04:35 pm

    செய்தி முன்னோட்டம்

    EV விற்பனையில் குறிப்பிடத்தக்க மந்தநிலை இருந்தபோதிலும், மின்சார வாகனங்களின்(EV கள்) உற்பத்தியை இரட்டிப்பாக்கி உள்ளது ஹூண்டாய் மோட்டார் அமெரிக்கா.

    ஹூண்டாய் மோட்டார் அமெரிக்கா, EVயில் அதிக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி ராண்டி பார்க்கர் கூறியுள்ளார்.

    அதன் ஒரு பகுதியாக, ஜோர்ஜியாவில் $7.6 பில்லியன் செலவில் ஒரு புதிய உற்பத்தி வசதி நிறுவப்பட உள்ளது.

    "மற்ற உற்பத்தியாளர்கள் தங்கள் மின்சார வாகன உற்பத்தியில் இருந்து பின்வாங்கும்போது, ​​நாங்கள் எங்கள் தயாரிப்புகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்" என்று பார்க்கர் கூறியுள்ளார்.

     ஹூண்டாய் 

    சந்தை சவால்களுக்கு மத்தியிலும் ஹூண்டாய் EVக்களின் விற்பனை அதிகரித்தது

    IONIQ 5, IONIQ 6, கோனா எலக்ட்ரிக், IONIQ 5 N உள்ளிட்டவை ஹூண்டாயின் மின்சார கார் மாடல்களாகும்.

    இதில் IONIQ 5 N என்ற மாடல் 2024 உலக செயல்திறன் கார் விருதை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கோனா எலக்ட்ரிக் மாடல் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.

    EV விற்பனையில் பொதுவான சரிவு இருந்தபோதிலும், மேற்கூறிய மாடல்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

    மார்ச் 2024 இல் மட்டும், ஹூண்டாய் அமெரிக்கா அதன் மூன்று பேட்டரி-எலக்ட்ரிக் மாடல்களில் 14,798 EVகளை விற்றது.

    இது முந்தைய ஆண்டின் விற்பனையை விட 53% அதிகமாகும்.

    "அமெரிக்காவில் நாங்கள் நன்றாக செயல்பட்டு வருகிறோம்," என்று பார்க்கர் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய

    சமீபத்திய

    நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல் விஷால்
    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி
    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்
    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025