NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / ரூ.4 லட்சம் வரை தள்ளுபடியுடன் கிடைக்கும் ஹூண்டாய் கார்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரூ.4 லட்சம் வரை தள்ளுபடியுடன் கிடைக்கும் ஹூண்டாய் கார்கள்

    ரூ.4 லட்சம் வரை தள்ளுபடியுடன் கிடைக்கும் ஹூண்டாய் கார்கள்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 11, 2024
    04:10 pm

    செய்தி முன்னோட்டம்

    நிதியாண்டு முடிவடைய உள்ள நிலையில், ஹூண்டாய் பல்வேறு மாடல்களில் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ.10,000 முதல் ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படுகின்றன.

    எக்ஸ்டர், க்ரெட்டா, மற்றும் அயோனிக் 5 ஆகியவற்றை தவிர, MY2023 மற்றும் MY2024 ஆகிய இரண்டு மாடல்களுக்கும் இந்த தள்ளுபடிகள் பொருந்தும்.

    ஹூண்டாய் கோனா EVக்கு அதிக தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. உலகளாவிய பேட்டரி பேக் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, ஹூண்டாய் கோனா EVயின் விலையும் குறைந்துள்ளது.

    MY2024 மாடல்களான கிராண்ட் ஐ10 நியோஸ் எம்டி(Non-CNG) வகைகளுக்கு மொத்தமாக ரூ.28,000 தள்ளுபடியும், AMT பதிப்புகளுக்கு ரூ.18,000 தள்ளுபடியும், CNG வகைகளுக்கு அதிகபட்சமாக ரூ.43,000 தள்ளுபடியும் வழங்கப்படுகின்றன.

    ஹூண்டாய்

    கிராண்ட் ஐ10 நியோஸ் , ஆரா, i20இன் தள்ளுபடிகள் 

    ஆரா சிஎன்ஜி வகைகளுக்கு மொத்தமாக ரூ.33,000 தள்ளுபடி வழங்கப்படுகின்றன.

    பழைய i20 N லைன் மாடல்களுக்கு அதிகபட்சமாக ரூ.60,000 தள்ளுபடியும், புதிய i20/i20 N லைன் மாடல்களுக்கு ரூ.5,000 மற்றும் ரூ.20,000 ரொக்கத் தள்ளுபடியும் வழங்கப்படுகின்றன.

    MY2024 ஹூண்டாய் வென்யூ, குறிப்பிட்ட மாடல்களின் அடிப்படையில் மாறுபட்ட பணத் தள்ளுபடிகள் மற்றும் பரிமாற்ற போனஸ்களை வழங்குகிறது.

    இந்த மாடல்களை வாங்குபவர்கள் ரூ.30,000 ரொக்க தள்ளுபடி மற்றும் ரூ.25,000 பரிமாற்ற போனஸை பெற்றுக்கொள்ளலாம்.

    அல்கசாரின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களுக்கு ரூ.15,000 ரொக்க தள்ளுபடியும் ரூ.20,000 பரிமாற்ற போனஸும் கிடைக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹூண்டாய்

    சமீபத்திய

    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு
    இந்தியாவின் பதிலடியால் பலத்த சேதம்; உலக நாடுகளிடம் நிதி வேண்டி கையேந்தி நிற்கும் பாகிஸ்தான் பாகிஸ்தான்
    இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு இந்திய ராணுவம்

    ஹூண்டாய்

    மாருதி டாடா ஹூண்டாய் கார்களுக்கு செம்ம தள்ளுபடி அறிவிப்பு! விலையை சரிபார்க்கவும் கார் உரிமையாளர்கள்
    ஹூண்டாய் வெர்னா 2023 vs ஹோண்டா சிட்டி - எது சிறந்த கார்? கார் உரிமையாளர்கள்
    ஹூண்டாய் SONATA 2024 - புதுப்பிக்கப்பட்ட மாற்றங்கள் என்ன? ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    ராணுவ மாடலில் வெளியாகப்போகும் ஹூண்டாயின் Mufasa SUV கார்! ஆட்டோமொபைல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025