Loading...
மிரட்டலான லுக்கில் ஹூண்டாயின் புதிய N-Line SUV பாரீஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம்; சிறப்பம்சங்கள் என்ன?
ஹூண்டாயின் புதிய N-Line SUV பாரீஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம்

மிரட்டலான லுக்கில் ஹூண்டாயின் புதிய N-Line SUV பாரீஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம்; சிறப்பம்சங்கள் என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 13, 2026
05:06 pm

செய்தி முன்னோட்டம்

பாரீஸ் மோட்டார் ஷோ 2026 நிகழ்வில், ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய 'Bayon N Line எஸ்.யு.வி மாடலை உலகளவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள பயோன் மாடலின் ஸ்போர்ட்டியான பதிப்பாக இந்த புதிய கார் உருவாக்கப்பட்டுள்ளது. நிலையான மாடலின் அடிப்படை வடிவமைப்பை பெற்றுள்ள போதிலும், 'என் லைன்' பதிப்பு கூடுதல் ஆக்ரோஷமான ஸ்டைலிங் அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. எதிர்காலத்தில் 138hp ஆற்றல் கொண்ட 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் இணைந்த ஸ்ட்ராங்-ஹைபிரிட் (Strong-Hybrid) பதிப்பையும் வெளியிட ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

வடிவமைப்பு

உட்புற, வெளிப்புற வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள்

தேன்கூடு வடிவக் கிரில், திறந்த வடிவ புதிய பம்பர் மற்றும் இடதுபுறத்தில் 'N Line' பேட்ஜ் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பளபளப்பான கருப்பு நிற மிர்ரர்கள், 18-இன்ச் அலாய் வீல்கள், புதிய ரூஃப் ஸ்பாய்லர், இரட்டை எக்சாஸ்ட் குழாய்கள் மற்றும் 'N Line' முத்திரைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

கார் உட்புறத்தில் N Line பிரத்யேக ஸ்டீயரிங் வீல் மற்றும் கியர் லீவர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

12.3-இன்ச் திரைகள், லெவல்-2 ADAS, போஸ் ஸ்பீக்கர் சிஸ்டம் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகள் உள்ளன.

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 90hp மற்றும் 115hp என இருவித ஆற்றல் அளவுகளில் வழங்கப்படுகிறது.

மேலும் 6-ஸ்பீட் மேனுவல் மற்றும் 7-ஸ்பீட் டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT