ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210: விலை மற்றும் வேரியண்ட்கள் குறித்த முழு விவரம்
செய்தி முன்னோட்டம்
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் குறைவான விலை கொண்ட ஆஃப்ரோடு அட்வென்சர் பைக்காக 'எக்ஸ்பல்ஸ் 210' விற்பனை செய்து வருகிறது. இது பேஸ் (Base) மற்றும் டாப் (Top) என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. பேஸ் வேரியன்டானது ரூ.1.63 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், டாப் வேரியன்டானது ரூ. 1.72 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பைக்
எக்ஸ்பல்ஸ் 210 சிறப்பம்சங்கள்:
இரண்டு வேரியண்ட்களிலும் ஒரே மாதிரியான 210cc, லிக்விட்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது 24.6hp பவர் மற்றும் 20.7Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. மேலும், இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. வேரியன்ட்களுக்கு இடையிலான வேறுபாடுகள்: அடிப்படை வேரியன்டான இதில் முழுமையான டிஜிட்டல் எல்சிடி (LCD) இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. பாதுகாப்பு வசதியாக சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் (Single-channel ABS) வழங்கப்பட்டுள்ளது. டாப் எண்டு வேரியன்டானது பேஸ் வேரியண்டை விட ரூ.9,000 கூடுதல் விலை கொண்டது. இதில் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதியுடன் கூடிய டிஎஃப்டி டிஸ்ப்ளே உள்ளது. டூயல்-சேனல் ஏபிஎஸ், விண்ட்ஸ்கிரீன் மற்றும் பின்புற லக்கேஜ் பிளேட் போன்ற கூடுதல் வசதிகள் உள்ளன.