Hero Maestro Xoom 110 ஸ்கூட்டர் இந்தியாவில் இன்று அறிமுகம்!
இந்தியாவில், Hero MotoCorp நிறுவனம் ஜனவரி 30 இல் இன்று Maestro Xoom 110 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், இளம் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், ஸ்டைல் மற்றும் 110 சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் என பல்வேறு மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் Hero Maestro Xoom 110 சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 110 சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படவுள்ளது. இந்த என்ஜின் 8.04 ஹெச்பி பவர் மற்றும் 8.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும். ஸ்கூட்டரை நல்ல முறையில் கையாளுவதற்காக மற்றும் சிறந்த செயல்திறனுக்காகப் பெரிய 12-இன்ச் டயர்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.
Hero Maestro Xoom 110 ஸ்கூட்டர் அறிமுகம் - சிறப்பு அம்சங்கள்
மேலும், இந்த ஸ்கூட்டரில், செல்போன் இணைப்பு தொழில்நுட்பம், செல்போன் சார்ஜ் செய்யும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வருகை ஹோண்டா டியோவிற்குக் கடுமையான போட்டியை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. இன்னும் பல அம்சங்களாக ஸூம் ஸ்கூட்டரில், எல்இடி ஹெட்லைட், எக்ஸ் ஸ்டைலிலான முகப்பு பகுதி, பெரிய ஸ்டோரேஜ் வசதி, ஸ்விட்சபிள் ஐ3எஸ் பட்டன் போன்ற அம்சங்களும் இந்த ஸ்கூட்டரில் இடம் பெற இருக்கின்றன. இந்த ஐ3எஸ் பட்டன் என்பது எரிபொருளை தேவைக்கேற்ப நிறுத்துதல் மற்றும் உட்செலுத்துலைச் அளிக்கும். Hero Maestro Xoom 110 இன் விலை இந்தியாவில் 68,816 (எக்ஸ்-ஷோரூம்) கிடைக்கும் எனக்கூறப்படுகிறது.