ஹீரோ சென்டினியல் என்னும் லிமிடெட் எடிஷன் பைக்கை வெளியிட உள்ளது ஹீரோ
இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், சென்டெனியல் என்ற பெயரில் கலெக்டர்ஸ் எடிஷன் மோட்டார்சைக்கிளை வெளியிட்டுள்ளது. இந்த பிரத்யேக மாடலின் 100 யூனிட்கள் மட்டுமே ஏலத்தின் மூலம் வாங்குவதற்கு கிடைக்கும் என்று அந்த நிறுவனம் இன்று அறிவித்தது. விலை விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், இந்த ஆண்டு செப்டம்பரில் இதற்கான டெலிவரி தொடங்கும். இந்த பைக், ஹீரோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான பிரிஜ்மோகன் லால் முன்ஜாலை கௌரவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்டினியல்: ஹீரோ மோட்டோகார்ப்பின் பாரம்பரியத்திற்கு ஒரு அஞ்சலி
தகவல்களின் படி, இந்த சிறப்பு பைக் ஹீரோவின் ஊழியர்கள், கூட்டாளிகள், வணிக கூட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு மட்டுமே ஏலம் விடப்படும். இந்த பைக்கின் ஏலத்தில் கிடைக்கும் வருமானம் "சமூகத்தின் நன்மைக்காக" பயன்படுத்தப்படும். HT ஆட்டோவின் கூற்றுப்படி, ஹீரோவுடனான தங்கள் பிணைப்பை வெளிப்படுத்தும் கதைகளைப் பகிர்ந்து கொள்ளமாறு ஹீரோ மோட்டோகார்ப் தங்களது வாடிக்கையாளர்களிடம் கேட்டு கொள்ளும். அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளுக்கு பிரத்தியேகமான சென்டினியல் மோட்டார் சைக்கிள் வெகுமதியாக வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஏரோடைனமிக் செயல்திறனுக்காக லைட்வெயிட் அலுமினியம் ஸ்விங்கார்ம் மற்றும் கார்பன் ஃபைபர் பாடி பேனல்களை சென்டெனியல் மோட்டார்சைக்கிள் கொண்டுள்ளது. மேலும், ஹேண்டில்பார்கள், மவுண்ட்கள், டிரிபிள் கிளாம்ப்கள் மற்றும் பின்-செட் ஃபுட் பெக்குகள் உள்ளிட்ட இதன் அம்சங்களும் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன.