LOADING...
தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலா? உண்மை இதுதான்
தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூல் என பரவிய தகவல் வதந்தி

தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலா? உண்மை இதுதான்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 21, 2025
05:20 pm

செய்தி முன்னோட்டம்

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க வரி விதிக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் தவறானவை என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) அன்று, மத்திய அரசின் அதிகாரபூர்வ உண்மை சரிபார்ப்பு அமைப்பான PIB Fact Check, இந்த வதந்தியை மறுத்துள்ளது. இந்த தகவல் யமுனா விரைவுச்சாலையில் இருந்து எடுக்கப்பட்டதாகவும், அது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) கட்டுப்பாட்டில் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளது. NHAI மற்றும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், தேசிய நெடுஞ்சாலைகளின் சுங்கச் சாவடிகளில் இரு சக்கர வாகனங்களுக்கு எவ்வித சுங்க வரியும் விதிக்கப்படுவதில்லை என்பதை தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகின்றன.

வதந்திகள்

வதந்திகள் பரவுவது முதல்முறை அல்ல

இது போன்ற வதந்திகள் பரவுவது இது முதல் முறையல்ல. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன்னரே இது குறித்து விளக்கம் அளித்து, இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க வரி விதிக்கும் திட்டம் இல்லை என்றும், இது போலிச் செய்தி என்றும் குறிப்பிட்டிருந்தார். தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகளின்படி, சுங்கச்சாவடி நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட சக்கர வாகனங்களுக்கு மட்டுமே விதிக்கப்படுகிறது. கார், சரக்கு வாகனங்கள், டிரக்குகள் மற்றும் பிற கனரக வாகனங்கள் இதில் அடங்கும். இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், டிராக்டர்கள் மற்றும் விலங்குகளால் இழுக்கப்படும் வண்டிகளுக்கு இந்த விதிகளின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

நிபந்தனை

50 சதவீத கட்டணம் வசூலிக்கலாம்

எனினும், சுங்கச்சாவடி விதிகளில் ஒரு நிபந்தனையும் உள்ளது. அதவாது சர்வீஸ் சாலை அல்லது மாற்று சாலை இருக்கும்போது, இரு சக்கர வாகன ஓட்டுநர் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தினால், அவருக்கு காருக்கு விதிக்கப்படும் கட்டணத்தில் 50% வசூலிக்கப்படலாம். இது போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த உதவும் என்றாலும், தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்களுக்கு பொதுவாக சுங்க வரி விதிக்கப்படுவதில்லை என்ற நிலைப்பாடு மாறவில்லை.

யமுனா விரைவுச்சாலை

யமுனா விரைவுச்சாலை கட்டண விபரம்

வைரலான பதிவு யமுனா விரைவுச் சாலையில் எடுக்கப்பட்ட நிலையில், அதை தேசிய நெடுஞ்சாலை ஆணைய சுங்கச் சாவடியுடன் இணைத்து வெளியிட்டதே சர்ச்சைக்கு காரணமானது. யமுனா விரைவுச் சாலை தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் இல்லை. மாறாக, யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தால் இயக்கப்படுகிறது. அதே நேரத்தில், யமுனா விரைவுச் சாலையில் இரு சக்கர வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.