
0001 எனும் ஃபேன்ஸி கார் நம்பர் 23 லட்சத்துக்கு விற்பனை: வேறு எந்த எண்கள் அதிக தேவையில் உள்ளன?
செய்தி முன்னோட்டம்
இந்தியா: 0001 என்ற கார் லைசென்ஸ் பிளேட் நம்பர் ரூ.23.4 லட்சத்துக்கு ஏலம் போயிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி போக்குவரத்துத் துறையின் தரவுகளின்படி, கடந்த மார்ச் மாதத்தில் 0001 என்ற கார் லைசென்ஸ் பிளேட் நம்பர் ரூ.23.4 லட்சத்துக்கு ஏலம் போயிருக்கிறது.
இந்த ஆண்டில் அதிகமான விலைக்கு ஏலம் போன லைசென்ஸ் பிளேட் நம்பர் இதுவாகும்.
0009 என்ற கார் லைசென்ஸ் பிளேட் நம்பர் ஜூன் மாதத்தில் ரூ. 11 லட்சத்திற்கு விற்பனையாகி இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மேலும், ஜேம்ஸ் பாண்ட் மற்றும் MS தோனியுடன்(ஜெர்சி எண். 7) தொடர்புடைய 0007 என்ற நம்பரும் நல்ல விலைக்கு விற்பனையாகி உள்ளது.
இந்தியா
வேறு எந்த எண்கள் அதிக தேவையில் உள்ளன?
0001 என்ற எண், அதன் அடிப்படை விலையான ரூ.5 லட்சத்தை கணிசமாக தாண்டியது என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
0002 முதல் 0009 வரையிலான எண்களுக்கு குறைந்தபட்ச இருப்பு விலை ரூ. 3 லட்சமாகும்.
அதுவே, 0010 முதல் 0099, 0786, 1000, 1111, 7777 மற்றும் 9999 வரையிலான எண்களுக்கு குறைந்தபட்ச இருப்பு விலை ரூ. 2 லட்சமாக உள்ளது.
0100, 01101, 0303 போன்ற எண்களுக்கு குறைந்தபட்ச இருப்பு விலை ரூ. 1 லட்சமாக உள்ளது.
அது தவிர, மற்ற விருப்பமான எண்கள் சுமார் ரூ.25,000த்தில் இருந்து கிடைக்கிறது.
முஸ்லீம் சமூகத்தில் 0786 என்ற எண் மங்களகரமானதாக கருதப்படுவதால் அதுவும் நல்ல விலைக்கு விற்பனையாகிறது.