விமான நிறுவனங்களால், டிக்கெட்டுகள் தரம் குறைக்கப்பட்ட பயணிகளுக்கு, கட்டணம் திரும்ப தர நடவடிக்கை: DGCA
விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ), விமானப் போக்குவரத்துத் தேவையை (சிஏஆர்) திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, "ஏர்லைன்ஸ் மறுப்பு, விமானங்களை ரத்து செய்தல் மற்றும் விமானங்களில் தாமதம் போன்ற காரணங்களால் பயணிகளுக்கு வழங்க வேண்டிய வசதிகள் மற்றும் பயணச்சீட்டு தரமிறக்கப்படுவதால் பாதிக்கப்படும் விமானப் பயணிகளின் உரிமைகளைப் பாதுகாக்க" ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. பயணிகளுக்கு வழங்கப்படும் டிக்கெட்டுகளை, அவர்கள் விருப்பமின்றி, விமான நிறுவனங்கள் தரமிறக்குவது குறித்து புகார்கள் அதிகரித்து வருவதால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
விமான பயணம்
டிஜிசிஏ அறிக்கை படி, தரமிறக்கப்படும் பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரீசிலுத்துள்ளதாக தெரிகிறது. அந்த இழப்பீடு வழங்கும் முறை பற்றி இன்னும் தகவல் இல்லை. "இந்தத் திருத்தம், முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் வகுப்பிலிருந்து விருப்பமின்றி தரமிறக்கப்படும் பயணி, விமான நிறுவனத்திடமிருந்து வரிகள் உட்பட டிக்கெட்டின் முழு மதிப்பையும் திரும்பப் பெற அனுமதிக்கும், மேலும் விமான நிறுவனம் பயணிகளை அடுத்த வகுப்பில் இலவசமாக ஏற்றிச் செல்லும்." என டிஜிசிஏ, அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனினும், பங்குதாரர்களின் ஆலோசனைக்குப் பிறகு, விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை நிறுவனம் (DGCA) இறுதி விதிமுறைகளை வெளியிடும்.