NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / இந்தியாவின் மிக நீண்ட விரைவுச்சாலையை திறந்து வைக்கும் பிரதமர்! சிறப்பு அம்சங்கள் என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் மிக நீண்ட விரைவுச்சாலையை திறந்து வைக்கும் பிரதமர்! சிறப்பு அம்சங்கள் என்ன?
    டெல்லி - மும்பை விரைவுச்சாலையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

    இந்தியாவின் மிக நீண்ட விரைவுச்சாலையை திறந்து வைக்கும் பிரதமர்! சிறப்பு அம்சங்கள் என்ன?

    எழுதியவர் Siranjeevi
    Feb 11, 2023
    05:06 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் மிக நீளமான சாலையை நாளை பிப்ரவரி 12 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

    டெல்லி, மும்பை விரைவுச்சாலையில் சொஹ்னா-தௌசா பாதை பிப். 14 ஆம் தேதி முதல் போக்குவரத்துக்கு திறக்கப்படும். இந்த விரைவுச்சாலை 1,386 கி.மீ., விரைவுச்சாலை டெல்லி மற்றும் மும்பையை இணைக்கும்.

    அதன் பயண நேரத்தை 24 மணிநேரத்தில் இருந்து சுமார் 12 மணிநேரமாக குறைக்கும்.

    இந்த விரைவுச்சாலையின் முழு பணியும் நிறைவடைந்ததும், இந்தியாவின் மிக நீளமான விரைவுச் சாலையாக இது மாறும்.

    கோட்டா, இந்தூர், ஜெய்ப்பூர், போபால், வதோதரா, சூரத் ஆகிய முக்கிய நகரங்களுக்கு இணைப்பை வழங்க பெரிய பரிமாற்ற சாலைகள் இருக்கும்.

    டெல்லி - மும்பை விரைவுச்சாலை

    டெல்லி - மும்பை விரைவுச்சாலை சிறப்பு அம்சங்கள்

    மேலும் ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள், பைப்லைன்கள் மற்றும் சூரிய மின் உற்பத்திஉள்ளிட்ட பயன்பாட்டு பாதைகளை அமைப்பதற்காக 3 மீட்டர் அகலமான பிரத்யேக நடைபாதையும் இருக்கும்.

    இதுமட்டுமின்றி, நெடுஞ்சாலையில் 500 மீட்டர், இடைவெளியில் 2,000 அதிகமான நீர் ரீசார்ஜ் புள்ளிகள் அமைத்து மழை நீர் சேகரிப்பை எளிதாக்குகிறது. மேலும் தானியங்கி போக்குவரத்து மேலாண்மை அமைப்பையும் கொண்டுள்ளது.

    இவை, இந்தியாவின் மிகப்பெரிய நீண்ட விரைவுச்சாலை ஆகும். 50 ஹவுரா பாலங்களுக்கு இணையான 12 லட்சம் டன் இரும்பு பயன்படுத்தப்பட உள்ளது.

    டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்களில் 15,000 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் 10 கோடி மனித வேலைநாள் கொண்ட வேலைவாய்ப்பை உருவாகும். இந்தியாவிலும் ஆசியாவிலும் விலங்குகள் மேம்பாலங்கள், அண்டர்பாஸ்கள் ஆகியவற்றிற்கு இடமளிக்கும் முதல் அதிவேக நெடுஞ்சாலை இதுவாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விரைவு சாலை
    இந்தியா
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    விரைவு சாலை

    இயந்திரமயமாகும் சுங்க சாவடிகள்: மத்திய இணை அமைச்சர் தமிழ்நாடு

    இந்தியா

    அதானி வில்மர் நிறுவனத்தில் அதிரடி ரெய்டு! சிக்கியது என்ன? தொழில்நுட்பம்
    அதானி பங்குகள் மீண்டும் சரிவு! காரணம் என்ன? தொழில்நுட்பம்
    தங்கம் விலை சற்று சரிவு - இனி வரும் நாட்களில் எப்படி இருக்கும்? தங்கம் வெள்ளி விலை
    சில எம்.பி.க்கள் இந்த சபைக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்: பிரதமர் மோடி காங்கிரஸ்

    பிரதமர் மோடி

    இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு! தமிழ்நாடு
    8வது 'வந்தே பாரத்' ரயில் சேவை: வரும் ஜனவரி 19 துவக்கம் வந்தே பாரத்
    கோல்டன் குளோப் வெற்றி: RRR பட குழுவினருக்கு பிரதமர், ரஜினி, கமல் உள்ளிட்டோர் பாராட்டு இந்தியா
    தை 2: திருவள்ளுவர் தினமும், அதன் வரலாறும் பொங்கல் திருநாள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025