மலிவான விலையில் அறிமுகமாகும் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார்!
இந்திய வாடிக்கையாளர்களை கவர்ந்த எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார். இந்த கார் ஏற்கனவே விற்பனையில் உள்ள சிட்ரோன் சி3 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும். தற்போது மக்களின் பார்வைக்கு இந்த கார் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தக் காரின் முன்பதிவு ஜனவரி 22ஆம் தேதி தொடங்க உள்ளது. பிப்ரவரி மாதம் முதல் சிட்ரோன் ஷோரூம்களில் இசி3 கார் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கலாம். முன் பக்கத்தில் சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது. காரில், 29.2 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 320 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும். ஈக்கோ மற்றும் ஸ்டாண்டர்டு என இரண்டு டிரைவிங் மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
3.3 kW ஆன்போர்டு ஏசி சார்ஜர் உடன் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரானது, 0 இருந்து மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 6.8 வினாடிகளில் செல்லும். டாப் ஸ்பீடு மணிக்கு 107 கிலோ மீட்டர். ஃபாஸ்ட் சார்ஜ் செய்தால் 57 நிமிடங்களில், 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகி விடும். ஆனால், ஹோம் சார்ஜர் பயன்படுத்தினால், 10 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் ஏறுவதற்கு பேட்டரி 10.5 மணி நேரத்தை எடுத்து கொள்ளும். இந்த கார் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காருடன் போட்டியிடுகிறது. பாதுகாப்புக்கு 2 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ் போன்ற வசதிகள் உள்ளன.