இந்தியாவின் முதல் சோலார் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்!
இந்தியாவின் சோலார் பொருத்தப்பட்ட முதல் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம், புனேவை மையமாக கொண்டு இயங்கும் வேவி மொபிலிட்டி (Vayve Mobility) எனும் நிறுவனம் அதன் முதல் சோலார் காரை வெளியீடு செய்துள்ளது. இந்த கார் இந்தியாவின் முதல் சோலார் கார் ஆகும். இந்த காருக்கு எவா (Vayve Eva) என்னும் பெயரை வைத்துள்ளது. சூரிய ஒளி இல்லாமலும் இந்த காரை இயக்க முடியும். அதற்காக பிளக் இன் வசதிக் கொடுக்கப்பட்டு உள்ளது. சார்ஜிங் பாயிண்ட் வாயிலாக சார்ஜ் செய்து கொள்ளவும் முடியும்.
குறைந்த விலையில் வர இருக்கிறது
டாடா நானே காரை போன்று மோனோகாக்யூ சேஸிஸை பயன்படுத்தியே எவா சோலார் எலெக்ட்ரிக் காரை வேவி உருவாக்கியுள்ளனர். இந்த எலெக்ட்ரிக் காரில் 6 கிலோவாட் லிக்யூடு கூல்டு பிஎம்எஸ்எம் எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. மோட்டார் 16 எச்பி பவரையும், 40 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் உடையது. லிக்யூடு கூல் டெக்னாலஜியும் இந்த சோலார் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரை சூரிய ஒளி அல்லது மின்சாரம் மூலம் சார்ஜ் செய்தால் 250 கிமீ தூரம் வரை பயணிக்க முடியுமாம். விற்பனைக்கு எப்போது வரும்? இந்த அம்சமான சோலார் எலெக்ட்ரிக் கார் 2024 ஆம் ஆண்டிற்குள் விற்பனைக்கு வந்துவிடும் எனக்கூறப்படுகிறது.