ஹூண்டாயின் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தார் ஷாருக்கான்; விலை என்ன?
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஹூண்டாயின் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளார். ஷாருக்கானின் 25 வருட திரைப் பயணத்தை கவுரவிக்கும் வகையில் தங்கள் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்து வைக்க ஹூண்டாய் நிறுவனம் அழைப்பு விடுத்து இருந்தது. மூன்று ஆண்டுகளுக்கு பின் தொடங்கப்பட்ட இந்திய வாகன கண்காட்சி ஜனவர் 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியின் மூலம் சர்வதேச வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் புதிய மாடல் கார் மற்றும் பைக்குகளை அறிமுகம் செய்யும். மேலும், நொய்டாவில் ஆட்டோ எக்ஸ்போ நிறுவனம் மூன்று ஆண்டுக்கு பின் இந்த கண்காட்சியை தொடங்கியுள்ளது. எனவே, ஹூண்டாய் நிறுவனத்தின் IONIQ 5 காரை ஷாருக்கான் அறிமுகம் செய்து வைத்தார்.
எலக்ட்ரிக் காரின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்
இந்த காரின் விலை ரூ. 44.95 லட்சத்தில் வெளியிடப்பட்டது, 631 கிமீ வரை செல்லும் திறன் உடையது. ஆட்டோ எக்ஸ்போ 2023: MG4 EV ஹேட்ச்பேக் 452 கிமீ வரம்பில் அறிமுகம் செய்துள்ளது. இவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம். அடுத்து, மாருதி சுசுகி EVX எலக்ட்ரிக் SUV கான்செப்ட் வெளியிடப்பட்டது. மேலும், 2023 எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் ரூ 14.73 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, 5, 6 மற்றும் 7-சீட்டர்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.