NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / விரைவில் இந்திய சாலைகளில் பிரத்யேக இரு சக்கர வாகனப் பாதைகள் உருவாகலாம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    விரைவில் இந்திய சாலைகளில் பிரத்யேக இரு சக்கர வாகனப் பாதைகள் உருவாகலாம்
    சாலைப் பாதுகாப்புத் திட்டம், ₹14,000 கோடி மதிப்பீட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது

    விரைவில் இந்திய சாலைகளில் பிரத்யேக இரு சக்கர வாகனப் பாதைகள் உருவாகலாம்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 28, 2024
    04:28 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற சாலைகளில், இரு சக்கர வாகனங்களுக்கு பிரத்யேக பாதைகளை அமைக்க விரிவான திட்டத்தை வகுத்து வருகிறது.

    இந்த முன்முயற்சியானது, நாட்டில் அதிக விபத்து விகிதங்களுக்கு முக்கிய பங்களிப்பாக அடையாளம் காணப்பட்ட, போக்குவரத்தை சீராக்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகும்.

    முக்கிய நகர்ப்புற சாலைகளில் பாதசாரிகளுக்கான பிரிட்ஜுகள் (FOBs) அல்லது அண்டர்பாஸ்களைக் கட்டுவதும் இந்தத் திட்டத்தில் அடங்கும்.

    சாலைப் பாதுகாப்புத் திட்டம், ₹14,000 கோடி மதிப்பீட்டில் மத்திய நிதியுதவித் திட்டமாக (CSS) வடிவமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ₹9,948 கோடியும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் (UTs) ₹4,053 கோடியும் வழங்கும்.

    விபத்து புள்ளிவிவரங்கள்

    இரு சக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள்: மிகவும் பாதிக்கப்படக்கூடிய சாலை பயனர்கள்

    இந்தியாவில் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளில் கிட்டத்தட்ட 44% இரு சக்கர வாகனங்களில் ஈடுபடுவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கூடுதலாக, விபத்துக்களில் 17% மற்றும் இறப்புகளில் 19% பாதசாரிகளை உள்ளடக்கியது.

    பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் எதிர்கொள்ளும் அபாயத்தை இந்தப் புள்ளிவிவரங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

    இந்த பாதிப்பு, சாலை பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க அரசை தூண்டியுள்ளது.

    பாதுகாப்பு நடவடிக்கைகள்

    'SAFE': சாலை விபத்துகளைக் குறைப்பதற்கான இந்தியாவின் உத்தி

    விபத்து விகிதங்களை குறைக்க, மத்திய அமைச்சகம் 'SAFE' என்ற தலைப்பில் ஒரு ஆலோசனைக் கட்டுரையை வெளியிட்டுள்ளது.

    சாலை விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட உத்திகளை அந்த கட்டுரை கோடிட்டுக் காட்டுகிறது.

    குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய சாலைப் பயனாளிகள் மீது கவனம் செலுத்துகிறது.

    இரு சக்கர வாகனங்களுக்கான பிரத்யேக நடைபாதைகளை மலேசியா வெற்றிகரமாக செயல்படுத்தியதில் இருந்து உத்வேகம் பெற்று, இந்த உத்திகள் போக்குவரத்தைப் பிரித்து, விபத்துகளைக் குறைக்கத் திட்டமிடுகின்றன.

    பள்ளி பாடத்திட்டங்களில் சாலைப் பாதுகாப்பை இணைத்து, ஆண்டுதோறும் சாலைப் பாதுகாப்புப் வோர்க்ஷாப்புகளை ஏற்பாடு செய்வதும் இந்த முன்மொழிவில் அடங்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இரு சக்கர வாகனம்
    போக்குவரத்து
    போக்குவரத்து விதிகள்
    விபத்து

    சமீபத்திய

    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    இரு சக்கர வாகனம்

    திமுக இளைஞரணி மாநாடு - இருசக்கர வாகன பேரணியை துவங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி  உதயநிதி ஸ்டாலின்
    வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களை ஸ்டார்ட் செய்யாதீர்கள்- வெடித்து சிதறும் அபாயம்! கார்
    2023ஆம் ஆண்டில் வாகன சில்லறை விற்பனை 11% உயர்வு ஆட்டோமொபைல்

    போக்குவரத்து

    போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக்: நாளை பேருந்துகள் இயங்கும் என அமைச்சர் உறுதி வேலைநிறுத்தம்
    பஸ் ஸ்ட்ரைக்: மதுரை தவிர மற்ற ஊர்களில் பேருந்துகள் வழக்கம்போல இயக்கம் வேலைநிறுத்தம்
    பஸ் ஸ்ட்ரைக்: பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்துள்ள ஊழியர்களுக்கு மெமோ வேலைநிறுத்தம்
    போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ் வேலைநிறுத்தம்

    போக்குவரத்து விதிகள்

    சென்ற ஆண்டு, சீட் பெல்ட் அணியாததால், சாலை விபத்துகளில் 16,000க்கும் மேல் உயிரிழந்துள்ளனர் வாகனம்
    ஜனவரி 10 வரை, பாம்பன் பாலத்தின் மேல் ரயில்கள் செல்ல தடை ரயில்கள்
    'தாழ்த்தள பேருந்துகள் இயக்குவது சாத்தியமில்லை' என நீதிமன்றத்தில் போக்குவரத்துத்துறை தகவல் தமிழ்நாடு
    தமிழகத்தில் பேருந்து படியில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் - போக்குவரத்துத்துறை தமிழ்நாடு

    விபத்து

    சோகத்தில் முடிந்த சுற்றுலா; தென்காசியில் கார்-லாரி மோதி 6 பேர் பலி தென்காசி
    காண்க: நைரோபி எரிவாயு நிறுவனத்தில் தீ விபத்து; இருவர் பலி, 165 பேர் காயம் தீ விபத்து
    காஞ்சிபுரத்தில் ஒரு ஸ்கூட்டர் மீது மோதி அதை 50 மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்ற BMW கார் காஞ்சிபுரம்
    மத்திய பிரதேச பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 11 பேர் பலி; 100 பேர் காயம் மத்திய பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025