இந்தியாவில் ₹59.90 லட்சத்தில் பிஎம்டபிள்யூ M 1000 RR சூப்பர் பைக் அறிமுகம்; சிறப்பம்சங்கள் என்ன?
செய்தி முன்னோட்டம்
பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் தனது அதிநவீன ரேசிங் சூப்பர் பைக்கான மேம்படுத்தப்பட்ட BMW M 1000 RR மாடலை இந்தியாவில் ₹59.90 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. முழுமையாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் இந்த லிட்டர்-கிளாஸ் சூப்பர் பைக்கின் விற்பனை நாடு முழுவதும் உள்ள பிஎம்டபிள்யூ மோட்டோராட் டீலர்ஷிப்களில் தொடங்கியுள்ளது. பிளாக்ஸ்டார்ம் மெட்டாலிக் வண்ணம் மற்றும் எம் கிராபிக்ஸ் வடிவமைப்புடன் வெளியாகியுள்ள இந்த பைக்கில் எம் காம்படிஷன் பேக்கேஜ் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட எஞ்சின்
218 bhp ஆற்றல் கொண்ட மேம்படுத்தப்பட்ட எஞ்சின் மற்றும் M Winglets 3.0 ஏரோடைனமிக்ஸ்
உலக சூப்பர் பைக் சாம்பியன்ஷிப் பந்தயங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புதிய மாடலின் 999cc இன்லைன்-ஃபோர் எஞ்சின் முந்தைய மாடலை விட 6 hp கூடுதலாக 218 bhp ஆற்றலையும் 113 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.
புதிய சிலிண்டர் ஹெட் போர்ட்கள் புதிய கம்பஷன் சேம்பர் மற்றும் டைட்டானியம் வால்வுகள் ஆகியவற்றுடன் டைட்டானியம் எக்ஸாஸ்ட் அமைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கார்பன்-ஃபைபரால் உருவாக்கப்பட்ட புதிய M Winglets 3.0 மற்றும் முன்பக்க ஃபேரிங் வடிவமைப்பு அதிவேகப் பயணத்தின் போது கூடுதல் டவுன்ஃபோர்ஸ் மற்றும் நிலைத்தன்மையை வழங்குகிறது.
எலக்ட்ரானிக் அம்சங்கள்
புதிய Slide Control எலக்ட்ரானிக் அம்சங்களும் 58-டிகிரி ஷார்ட்-ஸ்ட்ரோக் த்ராட்டிலும்
ரேஸ் டிராக்கில் பைக்கைத் துல்லியமாகக் கட்டுப்படுத்த உதவும் வகையில் Slide Control மற்றும் Brake Slide Assist ஆகிய 2 புதிய எலக்ட்ரானிக் அம்சங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
முதன்முறையாக ஸ்டீயரிங்-ஆங்கிள் சென்சாருடன் இணைக்கப்பட்டுள்ள டைனமிக் டிராக்ஷன் கண்ட்ரோல் அமைப்பு முடுக்கத்தின் போது கட்டுப்படுத்தப்பட்ட ஸ்லைடுகளை மேற்கொள்ள உதவுகிறது.
இத்துடன் பிரேக்கிங் போது கட்டுப்பாட்டை இழப்பதைத் தடுக்க ரேஸ் ஏபிஎஸ் புரோ உடன் இணைந்த பிரேக் ஸ்லைடு அசிஸ்ட் ரேஸ் டிராக்கிற்கான ஸ்லிக் ஏபிஎஸ் புரோ மோட் மற்றும் மணிக்கட்டை குறைவாக சுழற்றியே முழு வேகத்தை எட்ட உதவும் 58-டிகிரி எம் ஷார்ட்-ஸ்ட்ரோக் த்ராட்டில் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன.
அன்லிமிடெட் கிலோமீட்டர் வாரண்டி
ஸ்டாண்டர்ட் M Competition Package மற்றும் 3 ஆண்டுகள் அன்லிமிடெட் கிலோமீட்டர் வாரண்டி
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் BMW M 1000 RR பைக்கில் எம் கார்பன் சக்கரங்கள் கூடுதல் கார்பன்-ஃபைபர் பாகங்கள் 220 கிராம் எடை குறைவான எம் ஃபுட்ரெஸ்ட் அமைப்பு மற்றும் டிஎல்சி பூச்சு கொண்ட எம் எண்டூரன்ஸ் செயின் ஆகியவை அடங்கிய எம் காம்படிஷன் பேக்கேஜ் ஸ்டாண்டர்டாகக் கிடைக்கிறது.
மேலும் பந்தய நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிட எம் ஜிபிஎஸ் லேப்டிரிக்கர் ஆக்டிவேஷன் கோடும் வழங்கப்படுகிறது.
வாடிக்கையாளர்களின் வசதிக்காக 3 ஆண்டுகள் வரம்பற்ற கிலோமீட்டர் வாரண்டி மற்றும் 24 மணி நேர சாலை உதவிச் சேவையை பிஎம்டபிள்யூ மோட்டோராட் வழங்குகிறது.