பிஎம்டபுள்யு சிஈ 04 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் அதன் சிறப்பம்சங்கள்
பிஎம்டபுள்யு சிஈ 04 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய சிறப்பம்சங்கள் இங்கே. இந்த ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்தால் 130 கிமீ பயணிக்க முடியும் என அந்நிறுவனம் கூறுகிறது. 2.3கிலோ வாட் சார்ஜரைப் பயன்படுத்தி 4 மணி நேரம் 20 நிமிடங்களில் பேட்டரியை 0 - 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். இருப்பினும், 6.9கிலோ வாட் வேகமான சார்ஜர் அந்த நேரத்தை ஒரு மணி நேரம் 40 நிமிடங்களாகக் குறைக்கிறது. பிஎம்டபுள்யு சிஈ 04 ஒரு சிறிய முன் கவசம், இருபுறமும் அகண்ட பேனல்கள் மற்றும் பெஞ்ச் போன்ற இருக்கையுடன், மெலிந்த வால் பகுதியைக் கொண்டுள்ளது. பிஎம்டபுள்யு சிஈ 04 இ-ஸ்கூட்டரில் சேமிப்பகப் பெட்டிகளையும் இணைத்துள்ளது, அவை பக்கவாட்டிலும், முன்பகுதியிலும் அமைந்துள்ளன.
பிஎம்டபுள்யு சிஈ 04 இ-ஸ்கூட்டர்
காற்றோட்டமான மொபைல் சார்ஜிங் பெட்டி மற்றும் டைப்-சி யூ.எஸ்.பி சார்ஜிங் போர்ட் உள்ளது. இந்த வண்டியில் நிரந்தர காந்த மோட்டார் பயன்படுத்தப்படுகிறது. இது பேட்டரி மற்றும் பின் சக்கரத்திற்கு இடையில் ஸ்டீல் பிரேம்-இல் பொருத்தப்பட்டுள்ளது. 2.6 வினாடிகளில், குறைந்தது 0-50 கிமீ வேகத்தில் செல்லவும், அதிகபட்சமாக மணிக்கு 120 கிமீ வேகத்தில் செல்லவும் உதவுகிறது. சிஈ 04 ஒரு இழுவைக் கட்டுப்பாட்டு அமைப்பு, மூன்று நிலையான சவாரி முறைகளைக் கொண்டுள்ளது - ஈக்கோ, ரோடு மற்றும் ரெயின். சவாரி முறைகளை 10.25-இன்ச், உயர்-தெளிவுத்திறன் கொண்ட TFT டிஸ்ப்ளே மூலம் தேர்ந்து எடுக்கலாம். முன்பக்கத்தில் 120 பிரிவு டயரும், பின்புறம் 160 பிரிவு டயரும் கொண்ட இந்த ஸ்கூட்டர் 15-இன்ச் வீல்களில் சவாரி செய்கிறது.