எந்த 650சிசி ராயல் என்ஃபீல்டு மாடல் பயனாளர்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கும்?
இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி ப்ரீமியம் பைக் நிறுவனங்களுள் ஒன்று ராயல் என்ஃபீல்டு. உலகளவில் பிரதானமாக 350சிசி மற்றும் 650சிசி இன்ஜின் கொண்ட பைக்குகளை விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். இந்தியாவில் இன்டர்செப்டார் 650, காண்டினென்டல் GT 650, சூப்பர் மீட்டியார் 650 உள்ளிட்ட ப்ரீமியம் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். மேலும், ஷாட்கன் 650 என்ற புதிய 650சிசி இன்ஜின் கொண்ட பைக் ஒன்றையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த நான்கு பைக்குகளிலும் 47hp பவர் மற்றும் 52Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 650சிசி இன்ஜினே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவற்றில் எந்த பைக் இந்திய பயனாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்?
ராயல் என்ஃபீல்டு ப்ரீமியம் பைக்குகள்:
மேற்கூறிய நான்கு ராயல் என்ஃபீல்டு ப்ரீமியம் பைக்குகளில் விலை குறைவான பைக் என்றால் அது இன்டர்செப்டார் 650 தான். இந்தியாவில் ரூ.3.03 லட்சம் முதல் ரூ.3.31 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது இன்டர்செப்டார் 650. ஷாட்கன் 650 மாடலினை அறிமுகப்படுத்தியிருந்தாலும், அதனை இன்னும் ராயல் என்ஃபீல்டு வெளியிடவில்லை. பிற இரண்டு மாடல்களில் காண்டினென்டல் GT-யானது ஸ்போர்ட்டியாகவும், சூப்பர் மீட்டியாரானது க்ரூஸராகவும் இருக்கிறது. மேலும், கான்டினென்டலை விட பிற இரண்டு பைக்குகளும் ரூ.50,000 முதல் ரூ.90,000 வரை கூடுதலான விலை கொண்டது. எனவே, பயன்பாடு முதல் அனைத்தையும் கருத்தில் கொண்டால் கான்டினென்டல் GT-யே இந்திய பயனாளர்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கும்.