NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / தானியங்கி காரை அறிமுகப்படுத்திய பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    தானியங்கி காரை அறிமுகப்படுத்திய பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம்!
    மைனஸ் ஜீரோவின் தானியங்கி எலெக்ட்ரிக் வாகனம்

    தானியங்கி காரை அறிமுகப்படுத்திய பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம்!

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 05, 2023
    02:25 pm

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான மைனஸ் ஜீரோ நிறுவனம், புதிய தானியங்கி எலெக்ட்ரிக் காரான zPod என்ற காரை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

    தாங்கள் ஒரு ஆட்டோமொபைல் நிறுவனம் அல்ல, ஒரு தொழில்நுட்ப நிறுவனம் மட்டுமே என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறது மைனஸ் ஜீரோ.

    தாங்கள் வாகனங்களைத் தயாரிப்பதில்லை எனவும், ஒரு வாகனத்திற்குத் தேவையான தானியங்கி தொழில்நுட்பத்தை மட்டுமே தாங்கள் உருவாக்குவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

    அந்தத் தானியங்கி தொழில்நுட்பத்தை சந்தையில் காட்சிப்படுத்தவே zPod காரை உருவாக்கியிருக்கிறது மைனஸ் ஜீரோ.

    சாலை விபத்துக்களைத் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

    மேலும், தங்களுடைய இந்த புதிய தானியங்கி தொழில்நுட்பம் எப்படி இயங்குகிறது என்பது குறித்து விரிவாக விளக்கமளித்திருக்கிறது மைனஸ் ஜீரோ.

    பெங்களூரு

    என்ன விதமான தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது? 

    பொதுவாக தானியங்கி கார்களில் 'Lidar' தொழில்நுட்பமே பயன்படுத்தப்படும். ஆனால், இந்த வாகனத்தில் ஆறு கேமராக்களைப் பயன்படுத்தியிருக்கிறது மைனஸ் ஜீரோ.

    முன்பக்கம் மற்றும் பின்பக்கம் இரண்டு கேமராக்கள், பக்கவாட்டுகளில் நான்கு கேமராக்கள் என மொத்தம் ஆறு கேமராக்கள் இந்த தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

    இந்தக் கேமராக்களையே சென்சார்களாகப் பயன்படுத்தி இந்த வாகனம் இயங்கிறதாம். மேலும், இந்த தொழில்நுட்பத்தை புதிய கார்களில் மட்டுமல்லாமல், ஏற்கனவே நாம் பயன்படுத்தி வரும் கார்களிலும் இன்ஸ்டால் செய்ய முடியும் எனத் தெரிவித்திருக்கிறது மைனஸ் ஜீரோ நிறுவனம்.

    இந்த zPod காரை தயாரிக்கும் முடிவு எதுவும் இல்லை எனவும், தங்களுடைய தொழில்நுட்பத்தைக் கொண்டு வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தர விரும்புவதாகவுமே அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    ஆட்டோமொபைல்
    எலக்ட்ரிக் கார்
    எலக்ட்ரிக் வாகனங்கள்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    பெங்களூர்

    வைரல் வீடியோ: இந்தி எழுத்துக்கள் மீதிருக்கும் ஸ்டிக்கர்களைக் கிழித்தெறியும் இளைஞர் இந்தியா
    இசைக்கான மூன்றாம் கிராமி விருது வென்ற பெங்களூரை சேர்ந்த பாப் இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் இசையமைப்பாளர்கள்
    ஏரோ இந்தியா 2023: 75 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா என பிரதமர் மோடி பேச்சு பிரதமர் மோடி
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - ஒருவரை கைது செய்த காவல்துறை திருவண்ணாமலை

    ஆட்டோமொபைல்

    ஹீரோ ஸூம் (Xoom) எப்படி இருக்கிறது?: ரிவ்யூ  ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    எலெக்ட்ரிக் வாகன பாஸ்ட் சார்ஜிங்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!  கார்
    அப்டேட் செய்யப்பட்ட பல்சர் NS200, எப்படி இருக்கிறது?: ரிவ்யூ  ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    Scorpio N மாடலின் விலையை மீண்டும் உயர்த்தியது மஹிந்திரா!  மஹிந்திரா

    எலக்ட்ரிக் கார்

    புனே-வில் 1000 கோடி மதிப்பில் புதிய EV தொழிற்சாலை: மஹிந்திரா நிறுவனத்தின் முதலீடு ஆட்டோமொபைல்
    கனவா நிஜமா: 2023 இல் வருகிறது eVTOL இன் புதிய பறக்கும் எலக்ட்ரிக் கார் ஆட்டோமொபைல்
    ஹூண்டாயின் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தார் ஷாருக்கான்; விலை என்ன? மோட்டார்
    மலிவான விலையில் அறிமுகமாகும் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார்! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

    எலக்ட்ரிக் வாகனங்கள்

    இவா சோலார் எலெக்ட்ரிக் காரின் சிறப்புகள் என்னென்ன? வருடத்திற்கு 3கிமீ செல்லும்; எலக்ட்ரிக் கார்
    அட்வென்சர் ரக மாடலில் வெளிவரப்போகும் எலெக்ட்ரிக் பைக்! விலை இவ்வளவு குறைவா? எலக்ட்ரிக் பைக்
    ஓலா ஸ்கூட்டரை முறியடிக்க வந்த ஆம்பியர் பிரைமஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    Ampere Primus v/s Ola S1: எது சிறந்த தேர்வாக இருக்கும்? எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025