பஜாஜ் அவெஞ்சர் 220 குரூஸ் மாடலுக்கு ₹11,440 தள்ளுபடி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் பிரபலமான குரூஸர் ரக பைக்கான 'பஜாஜ் அவெஞ்சர் 220 குரூஸ்' மாடலுக்கு பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்போது அதிரடி விலைக்குறைப்பை அறிவித்துள்ளது. இந்தச் சிறப்புத் தள்ளுபடிக்கு பிறகு, பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ₹1,36,691-லிருந்து ₹1,25,251 ஆகக் குறைந்துள்ளது. அதாவது வாடிக்கையாளர்களுக்குச் சுமார் ₹11,440 வரை லாபம் கிடைக்கிறது. இந்த விலைக்குறைப்பு தற்காலிகமானது என்பதால், விருப்பமுள்ளவர்கள் அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட டீலர்களை அணுகி விரைவாக முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விவரங்கள்
என்ஜின் செயல்திறன்
பஜாஜ் அவெஞ்சர் 220 குரூஸ் மாடலில் சிங்கிள் சிலிண்டர், ஆயில்-கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பத்துடன் கூடிய என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச சக்தி 19.03 Ps மற்றும் டார்க் 17.55 Nm @ 7,000 rpm வரை செல்லும். இந்த பைக் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வருகிறது. இந்த பைக் 'Tubular Double Cradle' பிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்னால் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்னால் 5-ஸ்டெப் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ட்வின் ஷாக் அப்சார்பர்களும் உள்ளன. பாதுகாப்பிற்காக முன்பக்கத்தில் 280 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் ABS வசதியும், பின்பக்கத்தில் 130 மிமீ டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான சீட் அமைப்பு கொண்டிருப்பதால், அனைத்து தரப்பு ஓட்டுநர்களுக்கும் இது ஏதுவாக இருக்கும்.