Page Loader
ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டாஷ்போர்டில் தமிழை விரைவில் அறிமுகப்படுத்துவதாக ஏத்தர் எனர்ஜி அறிவிப்பு
ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டாஷ்போர்டில் தமிழ் விரைவில் அறிமுகம்

ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டாஷ்போர்டில் தமிழை விரைவில் அறிமுகப்படுத்துவதாக ஏத்தர் எனர்ஜி அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Jan 27, 2025
12:00 pm

செய்தி முன்னோட்டம்

ஏத்தர் எனர்ஜி ஆனது அதன் குடும்பம் சார்ந்த மின்சார ஸ்கூட்டரான ரிஸ்ட்டாவிற்காக (Rizta) பல மொழி டேஷ்போர்டு இன்டெர்ஃபேஸை அறிமுகம் செய்துள்ளது. ஆரம்பத்தில் ஹிந்தியுடன் வெளிவரும் டாஷ்போர்டு விரைவில் தமிழ், மராத்தி, குஜராத்தி, பெங்காலி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட எட்டு பிராந்திய மொழிகளிலும் வெளிவர உள்ளது. இந்த அம்சம் ஐஏஎம்ஏஐ (IAMAI) மற்றும் காண்டார் (Kantar) இன் இந்தியாவில் 2024 இன் இன்டர்நெட் அறிக்கையின் கண்டுபிடிப்புகளுடன் ஒத்துப்போகிறது. இது 98% இணைய பயனர்கள் பிராந்திய மொழிகளில் உள்ளடக்கத்தை அணுகுவதை எடுத்துக்காட்டுகிறது. இந்தப் போக்கை அங்கீகரித்து, தனிப்பயனாக்கப்பட்ட மொழி விருப்பங்களை வழங்குவதன் மூலம் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதை ஏத்தர் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிராந்திய மொழிகள்

பிராந்திய மொழிகளில் ஸ்கூட்டர் இன்டெர்ஃபேஸ்

"இந்தியாவின் பன்முகத்தன்மையும் பிராந்திய மொழிகளில் உள்ள பெருமையும் எங்கள் ஸ்கூட்டர்களை பயனர்களுக்கு ஏற்றதாக மாற்ற எங்களுக்கு உத்வேகம் அளித்தது" என்று ஏத்தர் எனர்ஜியின் தலைமை வணிக அதிகாரி ரவ்னீத் சிங் போகேலா கூறினார். பன்மொழி டாஷ்போர்டு பயனர்களுக்கு நன்கு தெரிந்த மற்றும் வசதியான தொடர்புகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம், நிறுவனத்தின் உள்-சாஃப்ட்வேர் இன்ஜினான ஏத்தர்ஸ்டாக் (AtherStack) வழியாக ஓவர்-தி-ஏர் (OTA) அப்டேட்டாக வழங்கப்படும். ஏத்தர்ஸ்டாக் FallSafe, AutoHold, வாட்ஸ்அப் அறிவிப்புகள், நேரலை இருப்பிடப் பகிர்வு மற்றும் Alexa ஒருங்கிணைப்பு போன்ற மேம்பட்ட அம்சங்களையும் வழங்குகிறது.

ரிஸ்டா

ரிஸ்டா ஸ்கூட்டர்

ஏப்ரல் 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ரிஸ்டா ஸ்கூட்டர் குடும்பம் சார்ந்த வாங்குபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பெரிய இருக்கை, பிளாட் ஃப்ளோர்போர்டு, ரிவர்ஸ் ஸ்விட்ச், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் 56 லிட்டர் வரை சேமிப்பு ஆகியவற்றை வழங்குகிறது. இந்த முயற்சியானது, இந்திய நுகர்வோருக்கு வசதியாக, கலாச்சார பொருத்தத்துடன் அதன் தொழில்நுட்பத்தை வடிவமைக்க ஏத்தரின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.