NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / சீன எலக்ட்ரிக் வாகன இறக்குமதிக்கு 100% சுங்கவரி; கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சீன எலக்ட்ரிக் வாகன இறக்குமதிக்கு 100% சுங்கவரி; கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி அறிவிப்பு
    சீன எலக்ட்ரிக் வாகன இறக்குமதிக்கு கனடாவில் 100% சுங்கவரி

    சீன எலக்ட்ரிக் வாகன இறக்குமதிக்கு 100% சுங்கவரி; கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 26, 2024
    07:47 pm

    செய்தி முன்னோட்டம்

    கனடா அரசாங்கம் சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்களின் இறக்குமதிக்கு 100 சதவீத சுங்க வரி விதித்து உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்த நிலையில், அதை தற்போது கனடாவும் பின்பற்றியுள்ளது.

    கூடுதலாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சீன எஃகு மற்றும் அலுமினியம் மீது 25 சதவீத சுங்க வரியை அறிவித்தார்.

    இதுதொடர்பாக நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த பிரச்சினை குறித்து உரையாற்றிய ட்ரூடோ, உலக சந்தையில் தன்னை நியாயமற்ற முறையில் நிலைநிறுத்த சீனா முயற்சி செய்வதாக விமர்சித்தார்.

    முன்னதாக, அமெரிக்காவைப் பின்பற்றி ஐரோப்பிய ஒன்றிய ஆணையமம் இதேபோன்ற ஒரு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்கா

    கனடா சுங்கவரி உயர்வுக்கு அமெரிக்கா ஊக்குவிப்பு

    அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் முன்னதாக ஞாயிற்றுக் கிழமை ட்ரூடோவை சந்திப்பின் போது, ​​கனடாவும் இதைச் செய்யுமாறு ஊக்குவித்தார்.

    தற்போது கனடாவில் இறக்குமதி செய்யப்பட்ட சீனத் தயாரிப்பான மின்சார வாகனங்கள் டெஸ்லாவிடமிருந்து மட்டுமே உள்ளன.

    இவை டெஸ்லா நிறுவனத்தின் ஷாங்காய் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. தற்போது சீன-பிராண்டட் எலக்ட்ரிக் வாகனங்கள் எதுவும் விற்கப்படவில்லை அல்லது இறக்குமதி செய்யப்படவில்லை.

    வட அமெரிக்காவில் ஒருங்கிணைந்த வாகனத் துறை இருப்பதால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள தனது நட்பு நாடுகளுடன் இணைந்து கனடா செயல்படும் என்று கனடா அரசு கூறியுள்ளது.

    சீனாவின் அதிகப்படியான விநியோகத்திற்கு கனடா ஒரு குப்பை கொட்டும் இடமாக மாறாமல் இருப்பதை தனது அரசாங்கம் உறுதி செய்யும் என்று மேலும் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனடா
    எலக்ட்ரிக் வாகனங்கள்
    மின்சார வாகனம்
    சீனா

    சமீபத்திய

    பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்திய சாலைகளுக்கான AI autopilot அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது பெங்களூர்
    திருமணத் தகராறு குறித்து ஆர்த்தி ரவி 'இறுதி விளக்கம்': "எங்களுக்குள் பிரிவு ஏற்பட காரணம் ஒரு மூன்றாவது நபர்" ஜெயம் ரவி
    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்

    கனடா

    "செக் நீதிமன்றத்தை அணுகவும்"- நிகில் குப்தா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு அமெரிக்கா
    அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் மீது இந்தியா விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்திய-அமெரிக்க தலைவர்கள் வலியுறுத்தல் அமெரிக்கா
    ஒரு விபத்தில் 16 பேரை கொன்ற இந்தியரை நாட்டை விட்டு வெளியேற்ற இருக்கும் கனடா  இந்தியா
    கனடா மற்றும் அமெரிக்காவின் கொலை குற்றசாட்டுகள் குறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர்  இந்தியா

    எலக்ட்ரிக் வாகனங்கள்

    600e கிராஸ்ஓவர் எலக்ட்ரிக் காரை 2025இல் களமிறக்க தயாராகி வரும் ஃபியட் எலக்ட்ரிக் கார்
    இந்தியாவில் வெளியானது வால்வோவின் புதிய 'C40 ரீசார்ஜ்' எலெக்ட்ரிக் கார் எலக்ட்ரிக் கார்
    மலிவான எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங்கை வழங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா ஆட்டோமொபைல்
    ஏன் அதிக விலையைக் கொண்டிருக்கின்றன எலெக்ட்ரிக் கார்கள்? எலக்ட்ரிக் கார்

    மின்சார வாகனம்

    வோக்ஸ்வேகன் இந்தியாவின் முதல் EV விரைவில் வெளியாகும் என தகவல் ஃபோக்ஸ்வேகன்
    ஸ்கோடா நிறுவனத்தின் ENYAQ iV எலக்ட்ரிக் எஸ்யூவி நாளை அறிமுகம் ஸ்கோடா
    அடுத்த ஆண்டு இந்தியாவில் EVயை அறிமுகப்படுத்த இருக்கிறது டொயோட்டா  டொயோட்டா
    ஐடி.3 GTX மாடலை அறிமுகப்படுத்தியது வோக்ஸ்வேகன் ஃபோக்ஸ்வேகன்

    சீனா

    'கைப்பாவைகள் அல்ல நாங்கள்': இந்திய ஊடகங்களுக்கு தைவான் பேட்டியளிக்க கூடாது என்று கூறிய சீனாவுக்கு தைவான் பதில்  இந்தியா
    மாலத்தீவுக்கு இலவச ராணுவ உதவியை வழங்க இருக்கிறது சீனா மாலத்தீவு
    பிரதமர் மோடியின் அருணாச்சலப் பிரதேச பயணத்தை விமர்சித்த சீனா: விமர்சனத்தை நிராகரித்தது இந்தியா இந்தியா
    சீனாவுக்கு எதிரான வதந்திகளைப் பரப்ப போலி இணைய அடையாளங்களை உருவாக்கிய CIA டொனால்ட் டிரம்ப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025